பொரியாளர் பொன்னையா

வாடா பொன்னையா. நல்ல இருக்கிறயா? கழுத்து கையில தங்கச் சங்கிலி. வசதியா இருக்கிற போல இருக்குது. நீ பள்ளிப் படிப்பையே பலமுறை குட்டிக்கரணம் போட்டுத் தேறியவன். மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று ஊர் பேர் தெரியாத பொறியியல் கல்லூரில படிச்ச நாலு வருசப் படிப்ப உருண்டு புரண்டு ஆறு வருசத்தில் முடிச்ச. இப்ப என்ன வேலைல இருகிகிற?

டேய் முத்து குறைந்த மதிப்பெண்
வாங்கி உயர் கல்வி படிக்க எனக்கு விருப்பமே இல்ல. பொறியியல் படிச்சாத்தான் மதிப்பு கவுரவம்னு எங்கப்பா ஒரு வெறியோட எங்க தோட்டத்தை வித்து என்னப் படிக்க வச்சாரு. நான் எவ்வளவோ கெஞ்சி உயர் கல்வி வேண்டாம்னு சொல்லியும் எம் பேச்சக் கேக்கல. ஒண்ணும் தெரியாமயே பி.டெக் பட்டத்தை வாங்கிட்டேன். எங்க அப்பாவைவிட என் தாய் மாமன்தான் நான் பொறியியல் பட்டதாரி ஆனதுபற்றி ரொம்பப் பெருமைப் பட்டார். பொறியியல் படிச்ச மாப்பிள்ளைக்குத்தான் அவுரு பொண்ணக் கட்டி வைப்பதில் உறுதியாக இருந்தார். எனக்கும் அவர் பொண்ணு பொன்மணிக்கும் திருமணத்தை அவரே நடத்தி வைத்தார். அவர் நம்ம மாநகரத்தில மிகப்பெரிய பொரி கடலை மொத்த வியாபாரி. அந்தக் கடைய எம்பேருக்கு எழுவச்சு என்னை கடைக்கு உரிமையாளர் ஆக்கிட்டார். நான் பொறுப்பை எடுத்ததுக்கப்பறம் பல வண்ணங்களில் பொரியையும் பொரி உருண்டைகளையும் பொட்டுக் கடலை உருண்டைகளையும் தயாரிக்கிறோம் . இப்ப எங்க பொரி உருண்டை பொடுக்க கடலை உருண்டையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யறோம்.

பெயர்ப் பலகையைப்.பாருடா.

பொன்னையா பொரி கடலை மொத்த வர்த்தகர். உரிமை: பொரியாளர் க. பொன்னையா, பி.டெக். நல்லா படிக்கறவனுக வெளிநாட்டுக்குப் போயி அந்த நாட்டுக்கு உழைக்கிறாங்க. ஒண்ணும் தெரியாத பொறியாளரான பொரியாளர் நானோ ஐநூறுக்கு பேருக்கு வேலை குடுத்து அவுங்க குடும்பங்களைக் காப்பாத்தறேன்.

டெய் பொரியாளர் பொன்னையா நீ பெரிய ஆளுடா. நானும் ஒண்ணுக்கும் ஒதவாத பட்டத்தை வாங்கினவன்டா.
எனக்கு உங்கடைல. ஒரு வேலை போட்டுக் குடுடா

நீயும் என்ன மாதிரி படிப்பில் அரைகுறை ஆசாமி.சரி. நீ ஆசப்படற. உன்ன மேற்பார்வையாளரா நியமிக்கிறேன். சம்பளம். மாசம் பத்தாயிரம் .

ரொம்ப நன்றிடா பொரியாளர் பொன்னையா.

பரவால்லடா பொரியாளர் கண்ணையா.

எழுதியவர் : மலர் (13-Oct-18, 1:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 124

மேலே