என் கதை சுருக்கம்

வாழ்வே பயணம்
நடந்தேன் சுவைத்தேன்
காணும் பொழுதில்
மறைந்தேன் திரிந்தேன்

இடறி விழுந்து முட்டி உடைந்த பிறகு
மீண்டெழுந்து தவழ்தேன் நகர்ந்தேன்
இதயம் மருந்து போட்ட பிறகு துணிந்து
நிமிர்ந்து பறந்தேன் திகைத்தேன்

மீன்கள் மூழ்கும் கடலில் விழுந்தே
நீச்சல் தன்னை பயின்றேன் கை
முள்ளில் தைத்த பின்பே
பூவின் தேனை ருசித்தேன்

மரங்கள் தாண்டி மலைகள் தாவி
பூமியோடு சுழற்ன்றேன் ஓடி
காற்று கண்ணம் கிள்ள இந்த
உலகைக் காண விரைந்தேன்

அளமியம் பறவை பறந்து செல்ல
அதில் உள்ள அனைவரும் என்னைப்
பார்ப்பதுபோல் வானம் பார்த்துக்
கையசைத்து நகைத்தேன்

என்னைப் போல நிழல் ஓடி
ஆடுவதைக் கண்டு துணையின்
அருமை உணர்ந்து நாளும்
நட்பைத் தேடி அணைத்தேன்

என் கால்களை நானே இடறிக் கொண்டு
அதில் இருந்து மீண்டு வருவதையும்
கேளி செய்து கை தட்டிச் சிரித்து
என் தவறுகளை ரசித்தேன்

பிறர் மனதில் என்னைக் காண
அதை யூகித்துக் கணித்து சலித்து
என் உள்ளத்தில் என்னைக் கண்டு
என்னை மீட்டு எடுத்தேன்

என் உலகின் தோளில் கைபோட்டு
மனக் கண்ணாடியின் கறை துடைத்து
எங்கும் மகிழ்வை மட்டும் நிறைத்து
இந்தப் பயணம் கடக்கின்றேன்

எழுதியவர் : ரா.சா (13-Oct-18, 7:35 am)
சேர்த்தது : ராசா
Tanglish : en kathai SURUKAM
பார்வை : 533

மேலே