மனிதரின் மூடநம்பிக்கை

மனிதரின் மூடநம்பிக்கை

சந்தக் கலித்துறை

திங்களுடை வெய்யனுடை கோள்களையு மேதான்
கங்குலென மாற்றிடுநி ழல்அரவு வழியே
சங்கமனி தர்சனிபி டிக்குமென பயந்தே
தங்கமனி தர்ஒளிய தானகலு மென்றார்

குறிப்பு : முன்னம் மனிதர்கள் சனி பீடை தரித்திரம் என்று சொன்னால் மட்டும்
பயந்து நடுங்கி கீழ் படிவார்கள். சூரிய சந்திர கிரணங்களின் ஊதா மற்றும்
சிகப்புக் கதிர்கள் உடம்பில் பட்டால் மூளையை அதுபாதிககும் என்று தெரிந்த முன்னோர் எல்லோரையும் அதிலிருந்து காப்பாற்ற வேண்டி விரும்பினர். லட்சக்கணக்கான உழைப்பாளிகள் புத்திமதியைக் கேட்க மாட்டார் களெனத் தெரிந்து அதன்படி சனி பீடை தரித்திரம் எனச்சொல்லி கிரணக் கதிர்களிலிருந்து காப்பாற்றி சேவைசெய்தார். ஆனால் இன்றோ அன்றைய தினத்தில் தான் கடற்கரைக்கு வந்து திரிந்து மூளையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இன்று எவனுக்கும் சேவை மனப்பான்மை கிடையாது

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-18, 8:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 63

மேலே