இயற்கையின் பொங்கும் எழில்கள்

கீழ்வானில் வங்கக்கடல்மேல்
வந்துதிக்கும் அருணன் பரப்பும்
அதிகாலை கிரணங்கள் அழகு
அது தரும் நீல வண்ணம்
கடலுக்கழகு , வெள்ளென்று இருக்கும்
கீழ்வானம் அழகோ அழகு

அருணன் கிரணங்கள் பட்டு
அலர்ந்த தாமரைகள் பொங்கும்
தடாகம் அழகு , அங்கு கரைமேல்
நடைப்பையிலும் அன்னங்கள் அழகு,
பக்கத்தில் தோகை விரித்தாடும்
நீல மையில் அழகு , அங்கு கூவும்
சோலைக்குயில் இசை அழகு ,
'கா கா என்று கரைந்து நம்மை
துயிலின்று எழுப்பிடும் காகங்கள்,
முற்றத்தில் வந்து சுறுசுறுப்பாய்
'சீட்' சீட் என்று சிற்றோலி எழுப்பி
புழுவும் தானியமும் தேடும்
சிட்டுக்குருவி கூட்டங்கள் அழகு
இல்லத்து கூரை மேல் வந்து
கூவும் சேவல் அழகு
அருணோதயம் அழகு அழகு

அந்தி மாலை வேளையில்
மலைப்பின்னே உறங்கச்செல்லும்
ஆதவன் முகம் அழகு, அது
விட்டுச் செல்லும் சிவந்த வானம் அழகு
அந்த ஓடும் நதி அதன் மீதாடும் ஓடம்
அதில் தன்னை மறந்து பாடும்
படகோட்டி பாடும் சிந்து அழகு
நதிக்கரையில் வளர் நெற்கதிர்கள்
கூத்தாடும் பச்சை வயல்கள் அழகு
அந்த கதிர்கள் மேல் தவழ்ந்து வரும்
மாலைத்தென்றல் இசைக்கும் பாடலழகு

அந்தி மாலை வேளை அழகு
தங்கம்போல் ஜொலிக்கும்
மாலைகதிரவன் அழகோ அழகு

கொட்டும் இருளைப்போக்க வந்த
முழுமதி முகம் அழகு, மதி அழகு
அது தரும் தன்னொளி இதம் அழகு
அங்கு தடாகத்தில் அதைக் காத்திருந்து
திங்களின் ஸ்பரிசம் பட்டு சிரித்து
மலரும் அந்தி குமுதம் முகங்கள் அழகு

கார்க்கால இரவு நேரம்
பால் பொழியும் நிலவு இரவு
ஒளி பிழம்பில் சொர்க்கம்போல் காட்சி தரும்
பவள மரம், தேக்கு, தேவதாரு, கருவேலம்
மரங்களின் புதுநிறம் கொண்ட இலைகளின் அழகு
அம்மம்மா எத்தனை அழகு எத்தனை அழகு
இயற்கை விருந்தளிக்கும் இக்காட்சிகள்
ஒவ்வொன்றிலும்

விந்தை தரும் இயற்கையின் பேரழகு
வற்றா புனல் போல் நமக்கு
நம் கண்களுக்கு உள்ளத்திற்கு
இறைவன் தந்த அழியா எழில் வண்ணம்
காலம் சுழன்று வந்துகொண்டே இருக்கும்
நமக்கு தந்துகொண்டே இருக்கும் நல்விருந்து




ருந்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Oct-18, 7:00 am)
பார்வை : 945

மேலே