ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குப்பை அள்ளுதல்
தமிழில் நல்ல சொல்
திடக்கழிவு மேலாண்மை !

தரலாம் நன்கொடை
தரக்கூடாது பெற்றோரை
முதியோர் இல்லத்திற்கு !

ஒழுக்கம் தவறினால்
வந்திடும் இழுக்கு
நற்பெயருக்கு !

பல ஆண்டுகளில் பெற்ற புகழ்
சில நொடிகளில்
தகர்ப்பு !

பெரும் புகழுக்கு
வந்தது களங்கம்
சபலம் !

விருதுகள் பல பெற்றும்
விரும்பத்தகாத செயல்
வீழ்த்திவிடும் !

கரும்புள்ளியே
கண்ணில்படும்
வெள்ளைக் காகிதத்தில் !

நல்ல மழை
சோதிடர்கள் காட்டில்
குரு பெயர்ச்சி !

சும்மா இருந்த சங்கை
ஊதிவிட்ட ஆண்டிகள்
பத்திரிகையாளர் கைது !

மனிதாபிமானமற்ற செயல்
சிறையிலும் நடக்குது
கொலை !

காத்திருப்பின்
கடுப்பை நீக்கியது
அலைபேசி !

விடிய விடிய விழிப்பு
விடிந்ததும் தூக்கம்
அலைபேசி !

நேரத்தை விழுங்குது
உழைப்பை சுருக்குது
அலைபேசி !

இளையோரின் வாழ்வில்
இறக்குது இடியை
அலைபேசி !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Oct-18, 5:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 91

மேலே