ஆழ்மனதின் ஆளுமை

எல்லோர் கண்ணாடியும்
முகம் காட்டும் ...
உன் மனக்கண்ணாடியே
உனை காட்டும் ...

பாதரச திரவியம்
பசையிழந்து போனால்
முகம் கொஞ்சம் கோணும்...
பல எண்ணம்
குழம்பி வலிந்தால்
மனம் குப்பை மேடாய் தோணும் ...

வெளியுலக வேதாந்தம்
என்றுமே தீராதது...
உன் உள்ளுலக சித்தாந்தம்
என்றுமே புரியாதது ...

கோமாளி கூட்டத்தில்
மேடையேறி என்ன பயன் ...
போராளி குணம் கொண்டு
தூர்வாரி உன்னை எடு ...

வெளிப்புற யுக்தி களைந்து...
உட்புற சக்தி தொடங்கு...
அதுவே ஆற்றலின் கிடங்கு ...

மனதுள்
புது விதி எழுது...
ஆற்றலை ஒன்று திரட்டு ...
சக்திகளை சக்கரம் செய் ...
புது தெம்பு உண்டாக்கு ....

மனமே
நீயென உணர் ...
மறுகணமே
தீயென திமிர் ...!

எழுதியவர் : குணா (14-Oct-18, 8:13 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 125

மேலே