ரூபாயில் ஓர் உயிர்

புகைமூட்டங்களுடன் கானப்படும் மேலோகத்தில் ஒரு கதவு தெரிகிறது கதவின் மேல் சொர்கத்திற்கான நுழைவுவாயில் என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கடியில் டேபிள் போட்டு ஒரு கணக்கபில்லை அமர்ந்துள்ளார். இவரின் வேலை மனிதர்கள் இறந்து மேலே வரும் போது அவர்கள் செய்த பாவங்களையும் நன்மைகளையும் கணக்கு போட்டு சொர்க்க வாசலினுள் அனுமதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பது. அவரை நோக்கி ரேஷன் கடையில் நிற்பது போல் கூட்டம் வரிசையாக நிற்கிறது. அந்த கணக்கபில்லை ஒவ்வொருவரையும் அவர்கள் செய்த பாவம் மற்றும் நற்செயல்களை கணக்கிட்டு நற்செயல் அதிகமாக செய்தவரை சொர்க்க வாசலினுள் அனுமதித்தும் பாவங்களை அதிகமாக செய்தோரை சொர்க்க வாசலினுள் அனுமதிக்காமல் வேறு வழியில் செல்ல சொல்கிறார். அதை பார்த்து பின்னே வருபவர்கள் பயத்தில் புலம்பிகொண்டே வருகிறார்கள். அதில் பத்தாவது ஆளாக கபிலன் நிற்கின்றான். கபிலனின் பின் நின்ற ஒருவன் கபிலனை பார்த்து நீ எங்க போவணு நினைக்குற கென்று கேட்க கபிலன் எங்க போனாலும் ஓகே மறுபடியும் பூலோகத்துக்குக மட்டும் அனுப்பாம இருந்த சரிதான் என்று லேசான புன்னகையுடன் சொல்கிறான். அவன் பின்நின்றவனும் சிரித்தபடியே நீங்க சொல்றதும் சரிதான் ,எங்க போவணு இப்போ தெரிஞ்சிரும் அடுத்து நீ தாணு சொல்றான். அதை காதில் வாங்கியபடியே கபிலன் கண்க்கபில்லை அருகில் சென்று நிற்கிறான், கையை இதனுள் விடு என்று கணக்கபில்லை அவர் வைத்திருந்த பெட்டியை கட்டுகிறான். அந்த பெட்டி பொன்னிறத்தில் உள்ளது நடுவில் ஒரு ஓட்டை காணபடுகிறது. அதனுள் கபிலன் கையை விட்டவுடன் கணக்கபில்லை அதிர்ச்சி அடைகிறான், கண்க்கபில்லையின் முகம் வேர்க்க தொடங்கியது, அதை பார்த்த கபிலன் என்ன ஆச்சுனு கேட்க கணக்க பிள்ளை நீங்கலம் எங்க இருந்துட வரிங்க ஒன்னு நல்லவனா இருங்க இல்ல கெட்டவன இருங்க அது என்ன நூல் பிடிச்ச மாதிரி நல்லதும் கெட்டதும் பண்றிங்க. நீங்க என்ன சொல்டரீங்கனு புரியலையே கணக்கபில்லை, நீ பண்ணுன நல்லதும் கேட்டதும் சமமா இருக்கு உன்ன உள்ள அனுப்பலாமா வேணாமானு இனி எங்க மேனேஜர் தான் முடிவெடுக்கணும் நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, மேனேஜர் வந்ததும் அந்த ரூம்ல போயு பாரு என்று சொல்லி மேனேஜர் ரூமை கபிலனிடம் காட்டுகிறான், கபிலனும் மேனேஜர் ரூம் வெளியே மேனேஜர் காக காத்துகொண்டிருக்கிறான், கொஞ்ச நேரம் கழித்து கிளெர்க் வந்து கபிலனிடம் உன்னை மேனேஜர் கூபிடுராறு என்று சொல்ல கபிலனும் எழுந்து மேனேஜர் ரூமிற்குள் நுழைந்து மேனேஜர் ஐ பார்க்கிறான் , மேனேஜர் கபிலன் வந்ததை உணர்ந்து நீ தான் கணக்கு சொன்ன ஆள என்று கேட்க ஆமா என்று சொல்கிறான் கபிலன் . இன்னைக்கு நான் நல்ல மூட்ல இருக்குர நால உனக்கு ஒரு வாய்ப்பு தரலாம் நு இருக்கேன், என்ன வாய்ப்பு ஐயா என்று கபிலன் வியப்புடன் கேட்க அவர் ஒரு ரூபாய் நாணையத்தை கபிலனை நோக்கி வீசுருகிறார், அதை கையில் நட்சினு கேட்ச் பிடித்தான் கபிலன்.உனக்கு ஒரு நாள் டைம் தரேன் நீ மறுபடியும் பூலோகத்துக்கு போயிட்டு எதாவது ஒரு நல்லது பண்ணிட்டு வா உன்ன சொர்கத்துக்கு உள்ள அனுமதிக்கிறேன், சரிங்க ஐயா அதுக்கு எதுக்கு இந்த ஒரு ரூபா , நீ நல்லது செஞ்சு முடிச்சவுடனே உங்க அப்பனா உன்ன இங்க கூட்டிட்டு வருவான்??, நீ நல்லது செஞ்சிட்டேன்னு தோனுசுனா அந்த ஒரு ரூபாயா கீழ போட்டுடு நீ அப்புறம் இங்க வந்துருவ, ஓ அதுக்கு தான இது சரிங்க ஐயா , ஒரு முக்கியமான விஷயம், சொல்லுங்க ஐயா ,நீ நல்லது செய்யறதுக்கு முன்னாடி நீ அந்த ஒரு ரூபாய கீழ போட்டுடா நரகம் தான் தெரிஞ்சுகோ , கபிலன் சரி ஐயா என்று சொன்னவுடன் , கபிலன் பூலோகத்தை நோக்கி அனுப்பி வைக்கபடுகிறான்....
சென்னை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு கோவில் உள்ளது. அதனருகில் ஒரு பெரிய ஆலமரம் இரவில் அதிகமான காற்று அடித்துகொண்டிருகிறது, அதன் அருகே நடு இரவில் நாலு பேரு நின்று கொண்டு கோவில் உண்டியலை பார்த்து பேசிகொள்கிறார்கள். அந்த கூட்டத்தின் தலைவன் மற்றவர்களிடம் சொல்கிறான் இந்த உண்டியல்ல நிறைய தங்கம் இருக்குனு சொல்றாங்க இத எப்படியாவது ஒடச்சு எடுக்கணும் டா என்று சொல்ல கூடத்தில் உள்ள இன்னொருவன் அது அவ்வளவு சுலபமான விசியம் இல்ல, இந்த உண்டியல எவன் தொட்டாலும் உடனே சாவுதாணு ஊருக்குள்ள பேசிகிரானுங்க இப்போ இத உடைக்கிறத நினச்சாலே பயமா இருக்கு , அதனாலதாண்டபொறுமையா இருக்கேன் இல்லேன இது எப்போவ கானம்போயிருக்கும். இப்போ நமக்கு தேவை இந்த விஷயம் தெரியாத ஒரு முட்டாள் அவனுக்கு ஒரு அமௌன்ட் கொடுத்து அவன இந்த உண்டியல உடைக்க சொல்லி செக் பண்ணிரலாம் , அதற்கு அந்த குரூப்ல உள்ள ஒருத்தன் இந்த ஊருலே நம்ப தான் முட்டாள் நம்பளவிட முட்டால எங்க புடிக்கிது என சொல்ல , தலைவன் முறைகிறான், மற்றொருவன் நாம வேணா சென்னைக்கு போய் காசுக்காக எதையும் பண்ணுற ஒருத்தன பிடிச்சிட்டு வருவோம்னு சொல்ல அந்த மொத்த கூட்டமும் அதற்கு சம்மதித்து சென்னை போக முடிவெடுகிறார்கள். உடனே சென்னை கிளம்புவோம் நாளைக்கு காலைல ஒருத்தன பிடிக்கணும்னு சொல்லி கிளம்புகிறார்கள் ,......
மறுநாள் காலை விடிந்தது அந்த நாளு திருடர்களும் சென்னை வந்தடைந்தார்கள் . அவர்களில் ஒருவன் இங்கு எப்படி காசுக்காக எதையும் செய்பவனை கண்டுபிடிப்பது என்று கேட்க அந்த தலைவன் இங்க இருக்க எல்லாம் ஒரு சூழ்நிலைல காசுக்காக எதையும் செய்யறவங்க தான் ஆனா நமக்கு இப்போ தேவ அந்த சூழ்நிலைல இருக்க ஒருத்தன் தான் . அவன எப்படி கண்டுபிடிக்கிறது ,இங்க பாக்குறதுல எவன் மூஞ்சிலம் சோகமா இருக்கோ அவனுங்க கிட்டலாம் போய் காசு வேணுமானு கேப்போம், சரினே வாங்க போய் அந்த மாதிரி ஒரு ஆள தேடி கண்டுபிடிப்போம், சரி வாங்க போலாம்.
திருடர்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டு அங்கு வருபவர் ,போபவர்களை பார்த்துக்கொண்டிருகின்றனர், கோவிலுக்கு வெளியே ஒரு 45 வயதுடைய பெண் அவளது குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிராள். அவளது குழந்தை பசியில் சோர்வடைந்த முகத்துடன் தனது அம்மாவிடம் கேட்கிறது, ரொம்ப பசிக்குதுமா , கொஞ்சம் பொறுடி யாரவது பணம் போட்டால் உடனே உனக்கு இட்லி வங்கி தரேன், ம்ம்ம் என்று சலித்த முகத்துடன் முகத்தை திருப்பிக்கொள்கிறது. அந்த அம்மா மற்றும் மகளின் அருகில் கபிலன் நின்று அவன் வைத்திருக்கும் ஒரு ரூபாயை வைத்து யோசனை பண்ணிக்கொண்டிருகிறான் , அதை பார்த்த திருடர் கூடத்தில் உள்ள ஒருவன் அண்ணே நம்ப தேடுற ஆள் கிடச்சுட்டான் , யாருடா???, அங்க பாருங்கனே அந்த அம்மாவையும் பிள்ளையையும் பாத்து கூட ஒரு ருபாய் கொடுக்க இவனுக்கு தோனலேன இவன் எவளோ பெரிய கஞ்சனா இருப்பான், அதுவும் சரி தான் வா போய் அவனை காசகாட்டி நம்ப வழிக்கு இழுப்போம், சரினே வாங்க போலாம் , திருடர்கள் அவனை நோக்கி நடக்க ஆரம்பிகிரார்கள் , கபிலனும் அந்த அம்மா மற்றும் பிள்ளையை கடந்து திருடர்கள் வரும் திசையில் நடக்கிறான். கபிலனும் அந்த திருடர்களும் எதிரெதிரே நெருங்கிவிட்டனர் திருடர்களின் தலைவன் எதிர் நின்று உனக்கு காசு தேவைன்னு எனக்கு தெரியும், எனக்கு காசு ஏதும் இப்போ தேவை இல்ல நீ நகரு மொதல, எங்ககிட்ட 5000 இருக்கு, அதற்கு கபிலன் இருந்தா போய் கூட்டத்தோட குடிச்சிட்டு குப்புற படுதுகோங்க, கூடத்திலிருந்து ஒருத்தன் , இப்போ உனக்கு 5000 வேணுமா வேணாமா?? என்று கேட்க கபிலன் யோசிக்கிறான் “நாம இங்க ஒரு நல்லது பண்ண தான் வந்தோம் இந்த 5000த வாங்கி அந்த கஷ்டபடுற அம்மாட்ட கொடுத்தா நம்ம டாஸ்க் சக்செஸ்” என்று மனதிற்குள் நினைத்து கொண்டு சரி 5000த குடுங்கனு கேட்கிறான். நீ கேட்டவுடனே நாங்க பணம் தர நாங்க கவர்ண்மென்ட் பேங்க் நீ மால்யா வா, நாங்க 5000 தரனும்னா எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் அப்படினு சொல்ல மறுபடியும் கபிலன் யோசிக்கிறான் “மேனேஜர் நம்பள ஒரு நல்லது தான் பண்ண சொன்னாரு நாம ரெண்டு நல்லது பண்ணிட்டு அவர்முன்னாடி போய் கெத்தா நிப்போம்னு நினைத்துகொண்டு சரி பண்ணுறேன்னு சொல்ல ,திருடர்களும் ஐய்யாயிரம் பணத்தை அவனிடம் கொடுகிறார்கள், பணத்தை வாங்கிய பின்பு ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கனு சொல்லிட்டு அந்த பணத்த கொண்டு போய் அந்த கஷ்டப்படும் அம்மாவிடம் கொடுக்கிறான்.அதை வாங்கிகொண்டு அந்த அம்மா அவனை வாழ்த்தி அனுப்புகிறது, இதை பார்த்துகொண்டிருந்த திருடர்கள் அவனை பார்த்து ஆச்சிரியபடுகிரார்கள். ஒரு ரூபாய் போடாத இவனுக்கு எப்படி அய்யாயிரம் கொடுக்க மனசு வந்தது என்று யோசித்துவிட்டு கடைசியில் அது நமக்கு எதுக்கு நம்ப வேலை முடிஞ்சா சரி என்று சொல்லி அவனிடம் நீ எனக்கு பண்ணவேண்டிய ஹெல்ப் எங்க ஊருல வந்து பண்ணனும்னு சொல்ல கபிலனும் அதற்கு ஒப்புக்கொண்டு திருடர்கக்ளுடன் சேர்ந்து ஊருக்கு புறப்பட்டான், இரவு 10 மணிக்கு அந்த கோவிலிருக்கும் கிராமத்திற்கு சென்றடைந்தார்கள். பிறகு அந்த கோவிலை கபிலனிடம் காட்டி கோவில் பற்றி பேசிகொண்டிருக்க கபிலன் குறுக்கிட்டு இப்போ எனக்கு கிளம்ப டைம் ஆகுது என்னோட வேலை என்னானு சொன்னா முடிச்சிட்டு கிளம்பிருவேன் என்று சொல்ல, திருடர்கள் கோவில் உண்டியலை காட்டி அதை தான் உடைக்க வேண்டும் என்று சொல்ல,கபிலனும் உடனே இது தான் வேலையா என்று கூறி சுத்தியியல் கேட்கிறான் திருடர்களில் ஒருவன் ஓடி சென்று மரத்தடியில் இருக்கும் சுத்தியியலை எடுத்து வந்து கொடுக்கிறான். அதை வாங்கிகொண்டு கபிலன் வேகமாக சென்று உண்டியியலை உடைக்க தொடங்குகிறான் , இவனை உண்டியியலை உடைத்த உடன் இவனுக்கு என்ன ஆகும் என்று பரபரப்புடன் பார்த்துகொண்டிருந்தார்கள், ஒருவழியாக கபிலன் கோவில் உண்டியியலை உடைத்து முடித்தான். முடித்ததும் தான் செய்ய வேண்டிய வேலை முடிந்தது என்று மனதில் நினைத்துகொண்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கீழே போட்டன் , போட்ட சில நொடிகளில் மடாரென்று தரையில் விழுந்தான், இதை பார்த்த திருடர்கள் தப்பித்தால் போதும் என்று தலைதெறித்து ஓடுகிறார்கள்.....
கபிலன் மேலோகம் வந்ததும் அவனுக்கு எதோ தனது சொந்த ஊருக்கு வந்தது போல நடந்து கொண்டு கணக்கபில்லையிடம் நான் வந்துருகேனு சொல்லி மேனேஜர வர சொல்லு என சொல்லிவிட்டு எதையோ சாதித்தது போல மேனேஜர் ரூமிற்கு வெளியே மேனேஜர்காக வெயிட் பண்ணிகொண்டிருக்கிறான், மேனேஜர் வந்ததும் பியுன் கபிலனை உள்ளே அழைத்ததும் போய் மேனேஜரிடம் நான் நல்லது செய்துவிட்டு வந்துவிட்டேன் சீகிரம் என்னை சொர்கதிற்குள் அனுமதிக்க சொல்லி கணக்கபில்லைக்கு மெயில் அனுப்புங்கனு கம்பிரமான குரலில் சொல்ல, மேனேஜர் முறைத்த முகத்துடன் தான் செய்தது தவறா சரியா என தெரியாமல் சீன் காட்டுவது மனிதர்களுக்கு புதிதல்ல.கபிலன் புரியாமல் யாரை கூறுகிறீர்கள் என்று கேட்க , கண்ணை கோரமாக வைத்துகொண்டு உன்னைத்தான் என்று சொல்ல கபிலன் திடுக்கிட்டு நான் நல்லது தான் செய்து வந்துள்ளேன், நீங்கள் ஒரு நல்லது செய்தால் போதும் என்று சொன்னீர்கள் அனால் நான் ரெண்டு நல்லது செய்து வந்துருகிறேன் விளையாடாமல் என்னை சொர்கத்திற்கு அனுமதிங்கள் என்று சொல்ல, மேனேஜர் எரிச்சலுடன் நீ நல்லது செய்து கிழித்தாய், உன்னிடம் நான் ஒரு நல்லது செய்து வானு சொன்ன நீ மறுபடியும் நல்லதையும் கேட்டதையும் சமமாக செய்துள்ளாய் என்று சொல்ல,கபிலன் நான் என்ன கெட்டது செய்தேன், நீ அந்த அம்மாவுக்கு பணம்கொடுத்து உதவினது நல்லது அனால் கோவில் உண்டியலை உடைத்தது தவறு, இதை கேட்ட கபிலன் அதிர்ச்சியடைந்தான். மேனேஜர் கபிலனை நரகத்திற்கு அனுப்ப கூறி அவனை இழுத்து செல்ல கட்டளை இட்டார். நரகத்தின் பஸ் ஒன்று வருகிறது அதை பார்பதற்கு சிகப்பு நிறத்தில் எமன் முகதோற்றதில் உள்ளது, அந்த பஸ்சிலிருந்து நான்கு அரக்கர்கள் இறங்கி வந்து அவனை ஏற்றி செல்கிறார்கள்.

எழுதியவர் : விக்னேஷ் ஹிரேஷ் (15-Oct-18, 3:57 pm)
சேர்த்தது : Vignesh Hiresh
Tanglish : roobaayil or uyir
பார்வை : 241

மேலே