ஆசை

உன்
நெற்றி வகுடில்
நித்தம் பயணிக்க
ஆசை

ஒற்றை குளியலில்
என் கார் நிறம் கரைந்து
மாநிறம் ஆக
ஆசை

முத்தமிடும் நேரத்தில்
உன் மூச்சு காத்து
ஸ்வாசிக்க
ஆசை

என் பசித்த
வயிருக்கு பாசமாய் நீ
பருக்கை ஊட்டி விட
ஆசை

நான் அயரும் நேரத்தில்
என் அலுவல்கள்
நீ பார்க்க
ஆசை

நீ கண் அயரும் நேரத்தில்
உன் கால் இடுக்கில்
மாட்டி கொள்ள
ஆசை

குங்குமம் இட்டு
குடில் அழைக்க
ஆசை
உன்னோடு வாழ ஆசை
உறவோடு இணைய ஆசை
கனவிளாவது
கை பிடிக்க ஆசை
அத்தனையும்
அளவில்லா ஆசை

எழுதியவர் : (15-Oct-18, 6:56 pm)
சேர்த்தது : VAIRAMUTHU ST
Tanglish : aasai
பார்வை : 75

மேலே