காதல்
,
அருவியில் நீராட வந்தாள், அவள்
மலையின் தொடையிலிருந்து
எத்தனையோ மூலிகைச்செடிகளை
நனைத்து காட்டு மலர்களிலும் நனைந்து
புது மழையில் வந்த அருவி நீர்
அதி வேகமாய் கீழே கொட்டிக்கொண்டிருக்க
அதனடியில் இவள், கைகளை அந்த
தற்காப்பு கம்பத்தில் இறுக பற்றி
லகுவாய் , விரிந்த தன் கார்க்கூந்தலை
நீர் வீழ்ச்சி நீரில் விளையாட விட்டாள்,
நீருக்கும் மேகத்திற்கும் காதலோ அங்கு
கட்டோடு குழல் அங்கு ஆட -இவள்
ஆடையோடு நீரில் விளையாட
கட்டுக்கடங்கா நீரின் துள்ளலில்
இவள் தன் காதலனின் இளமைத்துள்ளளைக் ,
கண்டாள், நீரின் அரவணைப்பில் தன்னை
மறந்தாள் நங்கை இவள், அங்கு அவன்
வலுவான பிடியில் இருப்பதாய் நினைத்தாள்
வெகுவாய்ப் பூரித்தாள்,கைகளின் வளையோசையும்,
காற்சிலம்பின் மெல்லோசையிலும் தான்
அங்கு நடனம் ஆடுவதாய் நினைத்தாள், எதிரில்
காதலன் இருப்பதாய் நினைத்து .................
கட்டிய மேலாடையின் பின்னே
கட்டிய கச்சையும் நழுவி, நீரில் விழுந்தோட
தன்னை மறந்து மன்மதன் பிடியில்
கனவுலகிலிருந்த நங்கை அவள் ............ஓடும்
கச்சையைக் கண்டு நடுங்கி, தன் தோளை
தொட்டுப்பார்க்க, புரிந்துகொண்டாள் விவரம்,
நெனவும் திரும்ப;' சீ, போக்கிரி நீரே
நீர்வீழ்ச்சியாய் வந்து காமுகனாய்,
என்னை தீண்டிய நினைப்போ... .............என்று
சீறினாள்..... மேலாடைகொண்டு உடலை மறைத்து
பொங்கும் இளமையும் மறைத்து.....
மறைந்திருந்து பார்க்கும் கண்களிலிருந்து
விடுபட்டு எப்படியோ மீண்டு வந்து
கரை சேர்ந்தாள்....போதுமடா இந்த குளிப்பு
என்று ஒருபுறம் நினைத்தாலும் அது தந்த இன்பத்தில்
பிரிந்த காதலன் ஸ்பரிசம் கண்டதை உணர்ந்தாள்...
இதோ அவள், அவனைத்தேடி ஓடுகிறாள்
நேற்றைய ஊடலை காற்றில் துறந்து
நாளை அவனோடு சேர்ந்தவரும் இன்பம் தரும்
சுகத்தின் கற்பனையில் கனவோடு....
ஏற்றுக்கொள்வானோ அவள் காதலன்
................................