கள்ளச் சிரிப்பா

மாயமா னைத்துரத்தி ஓடினாய் மனிதனாய்
மாயத்தில் என்னைத் துரத்துகின்றாய் தெய்வமாய்
ஆயர்பாடி கோபியர் பின்துரத்த ஓடிய
மாயக்கண் ணாஇன்னும் கள்ளச் சிரிப்பா !

மாயமா னைத்துரத்தி ஓடினாய் மாந்தனாய்
மாயத்தில் என்னைத் துரத்துகின்றாய் தெய்வமாய்
ஆயர்நற் கோபியர் பின்துரத்த ஓடிய
மாயாகள் ளச்சிரிப் பா ?

----இப்பொழுது ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-18, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே