வணங்குவோம் மூவரை

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்...!



வெள்ளைத் தாமரை வீற்றிருந்தே
வீணை மீட்டிடும் கலைவாணி
அள்ளக் குறையா செல்வமாக
ஆய கலைகள் தந்திடுவாள்,
அள்ளியே பொன்பொருள் தந்திடுவாள்
ஆதி லெட்சுமித் திருமகளே,
வள்ளலாய் வீரம் தருமுமையாள்,
வணங்குவோம் தேவியர் மூவரையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Oct-18, 6:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 478

மேலே