பேரூந்து 1 2 3 காகங்கள் கரைகின்றன முதலிய கவிதைகள்

பேரூந்து
டாப்பில் வந்து அமர்ந்தது
ஒரு பருந்து
பறப்பதையே மறந்து
அடுத்த ஊருக்குப் பயணம் !

பேரூந்து
உள்ளே பயணிகளின்
கச முசா பேச்சுச் சத்தம்
அதோடு பழைய பேரூந்தின்
லொட லொடா சத்தம்
பேரூந்து டாப்பில்
காகங்கள் கூடி கண்ணீரில் கரைகின்றன
காரணம்
செத்துக் கிடக்கிறது ஒரு காகம் !

பேரூந்து
அவன் ஊர் நிறுத்தம் கடந்தும்
தன்னை மறந்து தன் இருக்கையில் அவன் !
காரணம்
கருங் கூந்தல் காற்றில் பறக்க
செவ்விதழில் புன்னகை மிளிர
ஏதோ கனவில் சன்னல் ஓரத்தில் அவள் !
டிக்கட் டிக்கட் என்று
டிக்கெட் பரிசோதகன் வந்து சேர்ந்தான்
எல்லை தாண்டிய பயணம்
எடு நூறு ஃபைன் என்றான்
பத்து ரூபாய் பயணச்சீட்டிற்கு ஃபைன் நூறு ரூபாயா
இல்லையே என்றான் !
அவள் உதவிக்கு வந்தாள் ; நூறு ரூபாய் ஃபைன் தந்தாள்
அவள் ஊர் நிறுத்தம் அவள் இறங்கி நடந்தாள்
பரிசோதகன் அவனையும் அங்கே இறக்கிவிட்டான் !
விசில் ...... ரைட் போலாம் என்றான் நடத்துனன்
பின் ?
கதையா எழுதுகிறேன் ? கவிதை முடிந்து விட்டது
நீங்கள் வேண்டுமானால் எழுதுங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-18, 8:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 824

மேலே