மயங்கினேன் உன்னாலே

கற்றைக் கூந்தலின் மலர் மணம் கண்டேன்
சற்றே தடுமாறி நான் அவள் பக்கம் சென்றேன்
முற்றும் துறந்த முனிவர் நெஞ்சிலும் பிசகாமல்
பற்றை தூண்டும் பசும்பொன்னாய் அவள் நின்றாள்
இன்னும் தமிழ்க் கடலின் ஆழத்தில் மூழ்கி மூழ்கி
மின்னும் கவி முத்துக்களை முகிழ்த் தெடுக்க
எண்ணும் ஆசைக் கவியாய் அழகுச் சாகரம்
என்னும் அப்பெண்ணின் வசீகர அலைத் தூறலில்
என்னை நனைத்துநான் கண் மயங்கி நின்றேன்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (18-Oct-18, 11:02 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : mayanginen unnale
பார்வை : 280

மேலே