பிறப்பு

பிறப்பு


பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ....குறள்

(வெண்பா)

நாலு வகைபிறப்பு நால்வகை யோனியில்
நாலதிலே உற்பனமும் தாங்கிடும் --பையீசம்
அண்டசமென் பார்முட்டை உற்பனம் பின்னொன்று
ரெண்டில் விதையொன்று சொல்

விட்டதொன்று புத்திக்கு எட்டிடா அற்புதம்
விட்டார் சுவேதசம் வேர்வையினம் --பட்டிடா
கண்காணா உற்பனம்நம் விஞ்ஞானச் சான்றுண்டு
உண்மையிது முன்னோர் கருத்து

நால்வகை யோனியில் நல்பிறப்பும் ஏழாகும்
சொல்தேவர் மாந்தர் மிருகமுடன் --நல்பறவை
நீர்வாழ் உயிர்தாவ ரங்களும் ஊர்வனவாம்
காரேழ் உயிர்பூமி யில்

ஆனைமுகத் தானையறிவோம் ஆறுமுகன் அண்ணனாய்
ஆனையிலி ரண்டு பெரிதொன்று--ஆனைதந்தம்
சின்ன பிடியானைக் கென்றார் பெரியோரும்
பின்பெண்ணோ பிள்ளைகணே சன்

ஆனைமுகத் தையேனேற் றானாம் விநாயகன்
ஆனைமுகத் தானும் அரக்கனோ -- ஆணை
மிருகத்த லைகொண்டு அருவெறுக்க தக்கான்
இருந்தான் கஜமுகாசூ ரன்

ஆனைமுகத் தான்பூநூல் பானைவயிற் ரின்மேல்காண்
தானைத்த லைக்குமூத்தோன் பற்பல --தானைகண்ட
அண்ணன் கஜமுகத்தே வன்பாரு அண்ணலை
எண்ணித்தொ ழாரும் எவர்

பிள்ளையாரை எல்லோரும் கொண்டாட ஒர்சதுர்த்தி
எள்ளுண்டை கம்புக் கொழுக்கட்டை --வெள்ளெருக்கு
சோளம் வரகுடன்தின் பண்டம் உளுந்துவடை
பால்பாயா சம்சைவ மே

பரமனின் ஜீவன் பரமாத்மா மற்ற
பரமாத்மா நுண்னனுவின் காணாப் --பிரிவுகள்
சைவவைஷ்ண கோட்பாட்டின் ஐயமிலாத் தத்வமே
ஜைனரும் மாற்றில்லை பார்

ஆணாய் இருந்தவன் பெண்ணாய் பிறப்பனாம்
ஆண்பெண் மிருகமாக வும்பிறப்பர் -- தாண்டவனார்
போட்ட வுருவிதுவாம் கோட்டைமனம் கட்டாதீர்
போட்டபடி தோன்றுமே யிங்கு



விளக்கம் :
---------------
நாலுவகை யோனியில் ஏழு வகையான பிறப்புண்டு யோனிகள் என்ன பிறப்புகள் யாவையென் றிங்கு குறிப்பிட்டுள்ளது. ஏழு வகையான பிறப்பான மனிதர், தேவர், மிருகம் பட்சி ஊர்வன நீர் வாழ்வன மற்றும் தாவரம் இதில் ஏதாகிலும் ஒன்றாகத்தான் பிறப்பர். அவனவன் செய்கின்ற பாவ புண்ணியங்களைப் பொறுத்தே பிறப்பும் அமையும். இதுதான் சைவ வைஷ்ணவ சித்தாந்தம்!

ஆணாய் இருப்பவன் பெண்ணாக அல்லது அலியாக,மிருகமாக பறவையாக,பாம்பு போலவும், கடல் வாழ் உயிராகவோ, மரம் செடி கொடியாகவோ, தேவர்களாகவோ பிறக்கலாம் என்பதை உணர்த்தவே பிள்ளையார் இப்படியொரு உருவம் எடுத்துள்ளார். மேலும் மனிதர் சைவ உணவையே உட்கொள்ளல் வேண்டுமென உணர்த்துகிறார்!

எழுதியவர் : பழனி ராஜன் (18-Oct-18, 3:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 689

மேலே