அவள் பார்வை

நான் ஒன்றும் கவிஞன் அல்ல
வார்த்தைகளில் விளையாட
நான் இலக்கியவாதி அல்ல
சொற்களில் உணர்வினை புகுத்த
நான் கலைஞன் அல்ல
சொல்லால் உன்னை மயக்க
நான் ஒரு சாதாரண ஆண்
காதல் எனும் ஆயுதத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு வீரன்
காதல் தோல்விக்கு புறமுதுகு காட்டாத ஒரு தீரன்
பெண்ணுக்கு பயப்படாத ஒரு சூரன்
ஆனால்
அவள் கண்களுக்கு பயந்த ஒரு கோழை
நாணுகிறேன்

எழுதியவர் : VENKATESH K S (20-Oct-18, 11:46 pm)
சேர்த்தது : Venkatesh
Tanglish : aval parvai
பார்வை : 440

மேலே