பிறமொழி நூலகம் ஓர் எதிர்ப்புக் குரல்

மூத்த அகழ்வாராய்ச்சியாளரான இரா.நாகசாமி, பிராமணர்களின் வேத மரபை ஒட்டியே தமிழர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது என தொல்காப்பியம், சங்க இலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருந்த ‘தி மிர்ரர் ஆஃப் தமிழ் அண்ட் சான்ஸ்க்ரிட்’ என்ற நூல் வெளியானபோது தமிழறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு பிரிவினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். மார்க்சிய ஆய்வாளரான தேவ.பேரின்பன் இந்நூலை விமர்சித்து எழுதிய நூல் ‘தமிழும் சமஸ்கிருதமும்’ என்ற பெயரில் வெளிவந்தது. இரா.நாகசாமியின் ஆங்கில நூல் வெளியுலகில் தமிழுலகைப் பற்றி எடுத்து வைத்த கருத்துகளுக்கு எதிர்வினையாக, தேவ.பேரின்பனின் விமர்சன நூலையும் வெளியுலகுக்குக் கொண்டுசெல்லும் நோக்கோடு மருத்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செந்தில் மொழிபெயர்ப்பில் இந்த ஆங்கிலப் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் அண்ட் சான்ஸ்க்ரிட்: இல்யூஷன் அண்ட் ரியாலிட்டி

தேவ.பேரின்பன்

இந்தியன் யூனிவர்சிடி பிரஸ் (பாரதி புத்தகாலயம்)

சென்னை – 18.

விலை: ரூ.80

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொகுப்பு
வீ.பா.கணேசன்

எழுதியவர் : (21-Oct-18, 7:58 am)
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே