பரணிவாசம் நினைவில் கரிசல் மண்-------------------------------------இராநாறும்பூநாதன் --------------நூல் அறிமுகம்

காசிராஜன்
, தாமிரபரணி தொடங்கும் பாபநாசத்திலுள்ள கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியர். அவருக்குள் இருப்பதோ கரிசல்பட்டி கிராம விவசாயி. வண்ணதாசன் முன்னுரையில் சொல்வதுபோல கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துவிட்ட, மீண்டும் கிராமத்துக்குத் திரும்ப நினைக்கிற ஆனால், திரும்ப முடியாத ஒருவனின் குரலாகக் காசிராஜனின் குரல் இருக்கிறது. கிராமத்து விவசாயிகளான தனது பெற்றோர்களின் ஆசைக்கிணங்கி படித்து அரசு வேலைக்கு வந்ததாகச் சொல்லும் காசிராஜனின் எழுத்துகள் சாத்தூர் அருகே உள்ள கிராமத்தையே வலம்வருகின்றன. சித்தப்பா விட்டுச்சென்ற ரோஜா செடியைப் பார்த்து ஏங்குகிறார். மஞ்சனத்திச் செடிகளும், கருவேல மரங்களும் நிறைந்த கரிசல் காட்டின் மனிதர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். நாளெல்லாம் பருத்திக்காடுகளில் உழைக்கும் அய்யாவின், அம்மாவின் வாழ்க்கையைக் கண்ணீரோடு தனது கதைகளில் பதிவு செய்கிறார்.

புதர் மூடிய ஒருவன்

ஜி.காசிராஜன்

நூல் வனம் பதிப்பகம்

ராமாபுரம்,

சென்னை - 89

9176549991

எழுதியவர் : (21-Oct-18, 8:28 am)
பார்வை : 16

மேலே