புற்றுநோயால் வாடும் நெல் ஜெயராமன் ------------------- வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழித்தோன்றல் -------- இயற்கை விவசாயப் பண்ணை---------பண்டைய கால பாரம்பரிய நெல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் ஆதி திரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்தவர் நெல் ஜெயராமன்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதி திரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அதனைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக இலவசமாகவே திரும்பப் பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார்.

இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியைப் பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்ப செய்த பெருமை நெல் ஜெயராமனுக்கு உண்டு.

இவரது சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருதும், தமிழக அரசு , கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கியும் கவுரவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனாலும், தனது விழிப்புணர்வு பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அவரது நிலையை உணர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று நெல் ஜெயராமனைச் சந்தித்து நலம் விசாரித்தார். நெல் ஜெயராமனின் சேவையையும், பாரம்பரிய நெல்லின் மகத்துவத்தையும் உணர்ந்தவர் என்கிற முறையில் கார்த்தி அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்து தமிழ் திசை

எழுதியவர் : (21-Oct-18, 8:44 am)
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே