முதுமொழிக் காஞ்சி 70

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாலிய னல்லாதோன் தவஞ்செய்தல் பொய். 10

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.

(ப-ரை.) வாலியன் அல்லாதோன் - மனத்தில் பரிசுத்தம் இல்லாதவன், தவம் செய்தல் - தவத்தைச் செய்தல், பொய் - பொய்யாம்.

வாலியன் - (வால் - சுத்தி, இ - சாரியை) சுத்தியுள்ளவன் -சுத்தன்.

சுத்தமனமுள்ளவனே தவஞ்செய்தற்கு உரியவன்.

வாலியனல்லாதோன் என்பது

'மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி .
மறைந்தொழுகு மாந்தர் பலர்' 278 கூடா ஒழுக்கம் (திருக்குறள்) என்பதனால் விளக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Oct-18, 2:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே