வெளிநாட்டு வாழ்கை ரணம்

ஆறு குளம் ஏரி
அங்குமிங்கும் ஓடியாடி
ஒருவழியா நானும் வந்தேன் !
விமானம் புதுசுதான்
விம்மிக்கொண்டே விழியிரண்டும்
காயுமுன்னே கடல் கடந்து
நானும் வந்தேன் !
பாசாங்கு செய்த படிப்பெல்லாம்
இங்க பல்லைக்கட்டி
தொண்டைக்கட்டி - வேறு
மொழி பிதுங்கினின்னேன் !
உதவ யாருமில்ல
உண்ண தோன வில்ல
உறக்கமும் போதவில்லை,
ஓரிரு மாதம் கடந்த பின்ன
ஒருவழியா தேறிக்கொண்டேன் !
ரெண்டு பத்து
கூடணுமுன்னு இருபது
வயதை வாட்டிக்கொண்டேன்,
இன்னல் எதுன்னு
தெரியுமுன்னே - இருபத்தெட்டை
நானும் தொட்டேன் ,
வாங்கிய கடனும்
வாட்டிய வறுமையும்
வற்றி போகுமுன்னே - வயதோடு
வாலிபம் இழந்தேன்,
வாழ்க்கைத்துணை வருமென்றே
வளமையை சேர்க்க வந்தேன்
வழியும் விழியும் பிதுங்கி
கொள்ள வலியோடயே
வீதி நின்றேன் !
சொந்தங்கள் மெச்சு கொள்ள
சோகங்களே எஞ்சி நிக்க
இரவு பகல் பொழுதல்ல
எதுவென்ற யோசிக்கல
பொழுதும் பொதுதானே
பொங்கியெழ போதவில்லை
குழந்த குட்டி
பேறுகாலம் ஏதும் தெரியவில்ல
மனைவி மட்டும் அன்பு கொள்ள
ஒரு சேதி ஒரு வார்த்தை
கைபேசி நானும் தொடுக்க
பேசி பேசி பசி போனதுனு
உடம்பு பத்திரம்னு அவகூற
மங்கி போனபின்னே ...
ஆத்தா மாண்ட
சேதி கேட்டு அழ - மாச கடைசி
தேடி வர திதி க்கும்
விதிவந்ததென விம்மிக்கொண்டே
வாழ்ந்துவிட - நானும் அடைந்தேன்
பக்குவமாய் பல்லுக்கொட்டிய
பாலகனாய் .. வீடு சேர்ந்தேன்
பத்திரமாய். !

எழுதியவர் : ச. சோலைராஜ் (23-Oct-18, 4:52 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 48

மேலே