தாலாட்டு பாடியதோ வெள்ளி கொலுசு

பிஞ்சு பாதம் பதித்து
என் செல்ல மகள்
தத்தி தவழ்ந்திடும் வேலையிலே ...!!
ஏனோ என் வீடெங்கும்
திருவிழாக் கோலமானது...
அவள் வெள்ளி கொலுசின்
ஆரவாரத்தில்.....!!!
தூளியிலே துயில்
கொள்ளும் வேலையிலே
என் அழகு
தேவதைக்கு......
மௌனமாய் தாலாட்டு
பாடியதோ ....
வெள்ளி கொலுசு.....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (24-Oct-18, 2:09 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 474

மேலே