தேனுண்ணும் வண்டு

எதிர் வீட்டு சன்னலில் ஒரு வட்ட நிலா
தினமும் தென்றலாய் தீண்டுகிறது
பார்வையில் ஒரு களங்கமில்லை
பார்க்கும் போதெனக்கு புரியவில்லை

ஒருநாள் என் ஸ்கூட்டர் ஏனோ மக்கர்
ஒரு தம்பி வந்தெனக்கு உதவி செய்ய
அப்புறம் தான் தெரிந்தது அந்த அம்பி
அவளனுப்பிய அவளின் தம்பியென்று..

ஏனென் மேல் கருணை தெரியவில்லை
என் மக்கு மனசுக்கெதுவும் புரியவில்லை
உச்ச கட்டமாய் அவளனுப்பிய ஊறுகாய்
எச்சில் ஊற வைத்தது எண்ணமும் புரிந்தது

மலரைத் தேடி வண்டு போவது இயற்கை
இங்கே வண்டை ஈர்க்க மலர் மணம் வீசுதே
இப்போது என் மன வண்டும் ரீங்காரமிட்டது
தேனுண்டு பாடியது காதலே நீ வாழ்கவென்று !!!

எழுதியவர் : ஜெய் ரெட்டி (25-Oct-18, 11:02 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 180

மேலே