கலங்காதிரு மனமே

கலங்காது இரு மனமே/ -நீ
கலங்குவதால் ஏங்குது என் மனமே/ -நீ
கலங்கிடலாமோ தமிழ் மகளே/ -நீ
கலங்கரைவிளக்கம் விளக்கமாக
கற்றவள் தானே /
கப்பல் ஓட்டிய தமிழனின்
இளைய மகளே /
இதயபலம் உமக்கு வேண்டுமடி
சிறியவளே /
நெஞ்சு நிமிர்த்தி நின்று போர் புரியும் /
என் துணைக்கரமாக இணைந்த
இனிய மகளே /
வெற்றி வாள் கொடுத்து நெற்றித்
திலகமிட்டு/ -நீ
வாழ்த்தி வழி அனுப்பி வைக்க
வேண்டியவள் அல்லவா ? என் தர்மபத்தினியே /
முகவாட்டத்தையும் கலங்கும் விழி
நீரையும் விரட்டடி என்னவளே./
வீர முழக்கம் தான் எழுப்பும் ஒலி
கேட்டவுடன் /
வெகுண்டு எழ வேண்டும் எனக்கு முன் /
நீ அல்லவா? மாவீரத் தமிழ் மகளே /
கலங்கி நீ தயங்குவது ஏற்புடையதோ ? சொல் மகளே /
தண்ணீருக்கே தமிழன் தவிக்கும் இன்நாளிலே /
தடையைத் தகுத்து நல் வழி திறக்க புறப்படும் வேளை/ -நீ
கண்ணீரை அழைத்து என்னை தடுக்கலாமோ ?
தொடை நடுங்கி மன்னன் நான்
இல்லையடி பெண்ணே./
போதுமடி என் உயிரே உன் மயக்கம் / வேண்டாமடி கலக்கம்/
பெரும் இழப்புக்களை தடுப்போமடி /விளக்கம் கூறிய பின்னும் ஏன் தயக்கம்/ வெற்றிவாகை சூடி வீரத்திருமகனாக
வந்து விடுவேனடி நீ கலங்காத இரு மனமே /
போட்டிக்கு எழுதி தேர்வாக வில்லை
இன்று என் பார்வைக்கு வந்தன
பதிவு பண்ணி விட்டேன் 😊