என் காதலி நீ

என் உயிர் நீ, நான்
எப்போதும் உன்னுடனே
உள்ளம் உவகை பூக்கும்
உனைக் கைதொடும் நேரம்
மற்றவர் உனைத் தீண்ட
மனம் முழுக்க ரணமாகும்
கைக்குள்ளே அடங்கி நீ
காலமெல்லாம் வாழ்ந்துவிடு
கைபேசி எனும்
கட்டழகு காதலியே .

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (25-Oct-18, 9:25 pm)
பார்வை : 320

மேலே