சித்தி

சிந்திக்க சிந்திக்க
நல்லவை சிந்திக்க சிந்திக்க
நல்லோர் கூட்டு
தானாக கிட்டும்
சிந்தை தெளியும்
சிந்தைத் தெளிய
சிவனாவாய் நீ
உன்னைச்சுற்றி எல்லாம்
பின் சிவமயமே
ஞானியர் தேடும் சிததி இதுவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Oct-18, 4:13 am)
Tanglish : chithi
பார்வை : 72

மேலே