அம்மா

கண் பார்த்த மறு நிமிடம் என் பிணி உணரும் தாய்க்கு நிகரான மருத்துவர் இல்லை.

கண் அசைவால் நான் செய்த குற்றத்தைக் கண்டிக்கும் தாய்க்கு நிகரான காவலர் இல்லை.

ஒரு துளி கண்ணீரால் வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்கும் தாய்க்கு நிகரான ஆசிரியர் இல்லை.

அனுதினமும் தனக்காக உழைக்காத தன் சுகம் பாராத தாய்க்கு நிகரான சமூக சேவகர் இல்லை.

தன் சுகம் பார்த்து வலி தாங்காமல் மூன்றே மாதத்திற்குள் முடிவெடுத்திருந்தால் நீயும் நானும் இல்லை.

பொறுத்துக் கொண்டாய் அனைத்தையும் பொறுத்துக் கொண்டாய், உனக்காக நான்கு வருடம் நான் பொறுக்க மாட்டேனா?

ஊரைத் தாண்டா உனை உலகமெல்லாம் அழைத்துச் சென்று, தமிழகம் தாண்டா உனை தரணியெல்லாம் கூட்டிச் சென்று அழகு பார்க்க மாட்டேனா?

உனக்கென்று வாழாத உனக்கொரு தனி உலகமைத்து உன் கையில் செங்கோல் கொடுக்க மாட்டேனா?

அடுத்த பிறவியில் நீ என் மகளாக பிறக்க வேண்டாம்.
ஆம், உனைப்போல் பிள்ளை வளர்க்க என்னால் இயலாது.

அனைத்து பிறவியிலும் உன் குழந்தையாக நான்..............

எழுதியவர் : ஏ.தினபாகர் (26-Oct-18, 9:59 am)
சேர்த்தது : தினபாகர்
Tanglish : amma
பார்வை : 3429

மேலே