பிரிவு

நிலவில் நின்முகம் தெரிய
நினைவுகள் நிழலாய்த் தொடர

உணவு உண்ணாமல் உறங்குகிறேன்
கனவிலும் காணாமல் கலங்குகிறேன்

ஏனோ காரணம் புரியவில்லை
நானோ நீயோ தெரியவில்லை

இருந்தோம் நகமும் சதையாய்
பிரிந்தோம் வலி சதைக்கு

இருந்தோம் உடலும் உயிராய்
பிரிந்தோம் உடல் சிதைக்கு

மறக்க இயலாமல் மறைக்கிறேன்
உறக்கம் வராமல் தவிக்கிறேன்

எழுதியவர் : ஏ.தினபாகர் (26-Oct-18, 10:27 am)
சேர்த்தது : தினபாகர்
Tanglish : pirivu
பார்வை : 3165

மேலே