அவ்வுநீ சவ்வுநீ

ஏன்டி செவ்வந்தி, உங் கூடவர்ற ரண்டு பொண்ணுங்களும் யாருடி?

அவுங்க ரண்டு பேரும் எஞ் சித்தி பொண்ணுங்க பாட்டி.

அவுங்க பேரு என்னடி?

மூத்தவ பேரு 'அவ்நீ'. அவ தங்கச்சி பேரு.....

மூத்தவ பேரு 'அவ்வுநீ'-ன்னா எளையவ பேரு 'சவ்வுநீ'யா?

இல்லங்க பாட்டிம்மா. அவ பேரு சவ்மியா.

'சவ்வுமியா'வா? சரி. சரி. என்ன செய்யறது. தமிழ்ப் பேருக்கு கடுமையான பஞ்சம்.

?????????

எழுதியவர் : மலர் (26-Oct-18, 9:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 54

சிறந்த நகைச்சுவைகள்

மேலே