ஊர்வசி

இவள் சாதாரணமாய்
நம்மைப்போல் ஊரில்
வசிக்கும் ஊர்வசி

விழியின் கீழ் நாசியும்
விழியன் மேல் ஊசியும்
கொண்ட ஊர்வசி

மதுவிற்கு கால் இல்லை
இவளுக்கு கால் இருப்பதால்
இவளை யாரும் மது என்பதில்லை
மாது என்றே அழைக்கின்றனர்

இவள் பிரம்பையை
புல்லாங்குழல் ஆக்கி
பிரம்மனையே பிரம்மிக்கவைத்து
பிறர் மீது அம்பைத் தோடுக்கவே
பிரம்பையில் பிறந்த ரம்பை

புத்தனே இவளைக் கண்டால்
ஆசைகொண்டு இழுப்பான் வம்பை

இவள் ஆண்களை மலைக்கச் செய்பவள் வளைக்கச் செய்பவள் இளைக்கச் செய்பவள்
கொல்லாமல் செய்பவள்
இல்லாமல் செய்பவள்
நில்லாமல் செய்பவள்

இவள் தென்னைக்குப் பிறக்காது
அன்னைக்குப் பிறந்த கள்
இவளைக் கண்டும் காணாது
செல்லும் ஆண்கள் தான் கல்

இளமையில் கல் என்றவர்
இவளைக் கண்டிருந்தால்
இள மயில் கள் என்றிருப்பார்

காற்றடிக்கும் திசை பார்த்து
இலை திரும்புவதுபோல்
இவள் நடக்கும் திசை பார்த்து
ஆண்களின் தலை தானே திரும்புகிறது

தஞ்சை கோபுரத்தின் நிழல்
ஒரு முறைதான் தரையில்
விழுந்தது
இவள் கோயிலை சுற்றிவரும்போதுபோது

இறைவா
வரமாக வேண்டும்
நான் அவளுக்கு ஜுரமாக வேண்டும்
ஒரு நாளாவது அவளோடு வாழ

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (28-Oct-18, 4:36 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : oorvasi
பார்வை : 66

மேலே