அவள் பெண்

முகம் ஒரு செந்தாமரை
கருவிழி வண்டுகள் பார்க்கும்
விழிகள் இரு தாமரை
செவ்விதழ்த் தாமரையில்
முல்லை பூக்க
மலர்த் தாமரைப் பாதம் நோக
மெல்ல நடந்து வரும் அவள் பெண் !

மஞ்சள் பூசிய முகம்
முன் நெற்றியில் செந்தூரக் குங்குமம்
கருங் கூந்தலில் மல்லிகைப் பூச்சரம்
செவ்விதழ்கள் பாடும் தெய்வீக ராகம்
ஆலய கோபுரமாய் அசைந்து வரும் அவள் பெண் !

மார்கழித் திங்கள்
மாக்கோல வீதி
புன்னகை இதழ்க் கோலம் போட
மார்கழிப் பனியோடும் நெஞ்சில் இறை நினைவோடும்
ஆலய வழி பார்த்து நடந்து வரும் அவள் பெண் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Oct-18, 8:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : aval pen
பார்வை : 93

மேலே