சித்திரப் பூவிழி செம்மலர் பேரெழிலே

முத்துமென் புன்னகை செவ்விதழ் கோர்த்திட
முத்தமிழ்ப் பாடல் இதழ்கள் இசைத்திட
சித்திர பூவிழிச் செம்மலர்ப் பேரெழிலே
தித்திக் குதடிநெஞ் சம் !

------ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

முத்துமென் புன்னகை செவ்விதழ் கோர்த்திடும்
முத்தமிழ்ப் பாடும் இதழ்களும் --முத்திரைப்பொன்
சித்திரப் பூவிழிச் செம்மலர்ப் பேரெழிலே
தித்திக் குதடிநெஞ் சம் !

-----ஒரு விகற்ப நேரிசை வெண்பாக

எழுதியவர் : கவின் சாரலன் (29-Oct-18, 9:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே