தமிழ் பேசு

அன்னையின் குரல்
ஆதங்கத்தோடு
என் மேல் உனக்கு
ஏன் இந்த வெறுப்பு
என் முகம் பார்க்க
எத்தனை தயக்கம்
பல் துலக்கும் பசை முதல்
படுத்துறங்கும் பாய் வரை
அந்நியன் தயவிலே
அலுக்காமல் வாழ்கிறாய்
சங்கங்கள் அமைத்து
சரித்திரம் படைத்த உன்
பாட்டனின் வரலாற்றைக்
படிக்க கண்களையுமா
கடன் வாங்குவாய்
முகவரி கொடுத்தவளின்
முகத்தை மறக்கலாமா?
தமிழன் என்ற இறுமாப்போடு
தரணியில் நடமாடும் நீ
தயங்காது தமிழ் பேசு-இது
தமிழன்னையான என் வேண்டுகோள்.

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (29-Oct-18, 6:56 pm)
Tanglish : thamizh pesu
பார்வை : 95

மேலே