சின்ன சின்ன ஆசை

Umamahesvari Ck
சின்ன சின்ன ஆசை
சிலையாகிவிட ஆசை
வானத்தை போர்வையாக்கி
மடித்துவிட ஆசை
பட்டாம் பூச்சியாகி
பறந்துவிட ஆசை
லஞ்சமெனும் பேயை
விரட்டிவிட ஆசை
கள்ளர் இல்லா உலகில்
கனிவாய் வாழ்ந்திட ஆசை
காட்டை அழித்திடும் கடுவன்களை
கண்டவுடன் சுட்டுவிட ஆசை
உலகத்தை ஓர் நொடியில்
சுற்றிவிட ஆசை
கட்டு மரமாகி
கடலில் மிதந்துவிட ஆசை
ஏழ்மை இல்லா உலகை
படைத்துவிட ஆசை
மீண்டும் கருவாகி
வளர்ந்துவிட ஆசை
முதியோர் இல்லம் தேடா
மகனை பார்த்துவிட ஆசை
வண்ணத் தூரிகையால்
வானவில்லாய் மாறிவிட ஆசை
அலைகடலின் நுரையை
ஆடையில் பெற்றுவிட ஆசை
மலைகளின் அரசியாய்
மாறிவிட ஆசை!!!!!!!!!!