காற்று வெளியிடை

பெயரிடப்படாத தெருவில்
சரியாய் செப்பனிடப்படாத சாலையோரத்தில்
வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட
வீட்டின் முன்பக்கத்தின் ஒரு மூலையில்
கிழிந்து ஒட்டுப் போட்டும் போடாமலும்
என்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒரு நிறத்தில்
ஆடை அணிந்து
அழுக்கு முகம் கொண்ட
அகவை அறுபதுக்கும் எழுபதுக்கும்
இடைப்பட்ட தோற்றம் கொண்ட ஒரு முதியவர்
இரு கால்கள் நீட்டிய வன்னம் ஒய்யாரமாய் உட்கார்ந்து
துருப்பிடித்த பழைய ஆணி ஏறிய
நாளைக்கு சாகும் நிலையிலிருந்த
அந்த பழைய டயரை கழட்டி
பஞ்சர் பார்த்து கொண்டிருந்தார் ...
வயோதிகம் காரணமாய்
ஓட்டை சரிபட அடைக்காமல்
தன் மூச்சு காற்று முழுவதும் கொடுத்து
காற்று நிரப்பி நிரப்பி சோர்ந்து போனார் ...
இன்றைக்கு உணவும் காற்றிலே கலைந்ததை
எண்ணி எண்ணி ஏங்கினார் ...

எழுதியவர் : குணா (1-Nov-18, 10:58 am)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : kaatru veliyidai
பார்வை : 60

மேலே