உனக்காக

"மச்சி எங்க இருக்கா மா...???"

கூப்பிடறேன் ல எங்க இருக்கா...??

"எரும...!!!!


"சொல்லுடி என்ன பிரச்சனை எதுக்கு இப்ப கத்துறா...???"

"ஹே நீ எருமையா ..??


"எருமனு சொன்னதும் காதுல விழுகுதுன்னு சொல்லி சிரிக்க....!!!"

"ஏய் வாலு என்ன வாய் நீளுது..???


"ஒண்ணுமில்ல மச்சி நான் காபி போட்டு

கம்பெனிக்கு நீ வருவான்னு உக்காந்து இருக்கேன்மா....!!!! "

"ஓ அப்படியா குட்டிமா இதோ வந்துட்டேன்மா

"என் குரல் கொடுக்கும் கார்த்திக் இப்போ இல்லாது...

"வெறும் கோப்பை மட்டும் கையில் வைத்து கொண்டு காத்திருந்தால் சக்தி...!!!!!



" நேத்து வீட்டை விட்டு அம்மா வீட்டுக்கு வந்து சக்திக்கு தன் கணவன் கார்த்திக் நியாபகம் மட்டும் தான்..."

ஹே என்னடி பண்றா....????

"நான் உனக்காக சாப்பிடமா உக்காந்து இருக்கேன் வர்றியா ..??

"குட்டிமா என்ன பண்றா..??

" இதல்லாம் கார்த்திக் கூறும் வார்த்தைகள்...!!!!

"ஒரு சின்ன சண்டையிட்டு வந்தவள்

இப்ப வரைக்கும் கார்த்திக்கிடம் இருந்து ஒரு மெசஜ்ஜோ, போன் அழைப்போ வரல...!!!

"வீட்டுக்கு வந்தாளே ஒருவார்த்தை கேட்க தோனல..."

சரி நாம வந்ததும் தப்பு தானே...!!!

"போக மனமில்லாமல் இல்ல சக்தி மனசு ஏங்க ஒருபக்கம்...!!!

வந்து பேசட்டும் அத்துக்கு பிறகு போவோம் வீட்டுக்கு " என சக்தி நினைக்க ...!!!!.

நம்ம சக்திய பத்தி சொல்லனும்னா

( "எல்லார்கிட்டயும் நல்லாவே சிரிச்சு பேசுவா...

"எல்லாருக்கும் உதவி செய்வா... கொஞ்சம் சென்சிட்டிவ் ...

"பொறுமையா இருப்பாங்க.. கோபம் வந்தா கொஞ்சம் கடிந்திடுவா.. அப்புறம் பிறகு பேசிட்டோம்னு பீல் பண்ணுவா..

"அம்மா, அப்பா ஒரு சின்ன குடும்பத்தில் வாழ்ந்த வீட்டுக்கிளி..

"இப்போ கல்யாணம் ஆகி போன ஊரு கொஞ்சம் தள்ளி..

"அம்மாவ விட்டு ரொம்ப நாள் இருந்தது இல்ல..

"எப்ப பார்த்தாலும் அம்மா அம்மான்னு கூப்பிடுறவ, பல மாதம் வீட்டு பக்கம் வராமல், இருந்துட்டு

கார்த்திக்கிடம் கேட்டு பார்த்துட்டு இனி தனியா கிளம்பவேண்டியது தான் என கார்த்திக்கிடம் சண்டை போட்டு வந்த பிறகு இங்க நிம்மதி இல்லாமால் தவித்தாள்....

"கார்த்திக் நல்ல பையன்...."

"உள்ளுக்குள்ள இருக்குற பாசத்தை வெளில காட்ட தெரியாத பையன்..

"சொந்தம்னு சொல்லிக்க சக்தியை தவிர யாரும் இல்லை...!!!

)


"பொறுமையா இருந்த சக்தி", இதுக்கு மேல சரி பட்டு வராது என

"கோபத்துடன் கார்த்திக்கிற்கு போன் செய்தால்

ஏனோ ரிங் போகல

" கோபத்துடன் 10 குறுஞ்செய்தியினை தட்டி விட..

"ஹே

"என்ன....

"மச்சி

ரொம்ப பிஸியா...???

சனியன் தொலைஞ்சுதுன்னு

ஜாலியா இருக்கியா..?

சொல்லுங்க...?

"நீயா பேசுற வரைக்கும் நான் பேச மாட்டேன் போ...??

"மனதில் நினைத்ததை பறக்க விட்டாள்..


"கார்த்திக்கு யாருமில்லை, சக்தி மட்டும் தான்..உறவுன்னு சொல்லிக்க...


"கோவிச்சுட்டு வந்ததுக்கு பின்னால வந்து இருப்பானே..?

"எங்க காணும்

சரி சார் ரொம்ப கோபம் போல...


"அம்மா என்னடி தனியா வர்றான்னு கேட்டதுக்கு

"உன் மாப்பிள்ளைக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு

"அதான் நான் வந்துட்டேன் மா...

"அம்மா கிட்ட சண்ட போட்டதை சொல்லாத சக்தி..அம்மா அப்பா கிட்ட

"இதுவரைக்கும் ஏதும் மறைத்தது இல்ல..

"சின்ன சண்டை தான் சரியாகிடும்னு நினைச்சா.....,

"ஆனா கார்த்திக் கிட்ட பேசல என்பதை யார்கிட்டையும்ம் அந்த கோபத்தை காட்ட முடியாமல் தவித்தாள்....சக்தி ..

"அம்மு அம்மு , சீக்கிரம் ரெடியாகு சாபிட்டலாம்னு அம்மா பார்வதி சொல்ல

இரு மா , கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேனே ...!!!



"அம்மு மணி அகுதுல சீக்கிரம் வா டா

அப்பா சாப்பிடமா இருக்காங்க
"
வாடா ...

"சக்திக்கு சாப்பிடும் போது

"கார்த்திக் நியாபகம் வர..


"அம்மா ஒரு 5 நிமிஷம் மா

அவங்க சாப்பிட்டாங்கனு தெரில மா..

நான் கேட்கல.....

என்னான்னு கேட்டுட்டு வந்து சாப்பிடறேன் மா...


"சக்தி மறுபடியும் கால் பண்ண போன் ரீச் ஆகல

இது என்னடா பெரிய வம்பா இருக்குனு

மறுபடியும்

மெசஜ் அனுப்பினாள்......!!!!!


""மச்சி , ஒழுங்கா சாப்பிடு நான் இப்பவே கிளம்பி வந்துடறேன் ..

நீ பேசவே மாட்ரா

என பீல் பண்ணி அனுப்பினாள்..


"அம்மா, சாப்பிட மறுபடியும் கூப்பிட

அம்மா அவங்களுக்கு ஆபிசில் எதோ வெளில கிளம்பராங்கலாம் வெளில மீட்டிங்....

சோ நான் உடனே கிளம்பறேன்னு சொல்லி நீங்க ஏதும் தப்பா

நினைச்சுக்காதிங்க மா.......

நைட்டும் வெளில சாப்பிட்டேன்னு சொன்னா

வந்து தூங்கி எழும்பி போறா என அம்மா கடிந்துக்கொள்ள..

சரி டா , நீ பார்த்து போட...

சாப்பிடமா போறது தான் கஷ்டமா இருக்கு..

அடுத்த டைம் மாப்பிள்ளையை அழைச்சுட்டு வா மா..என அப்பா சொல்ல ...



சரி மா சரி பா..

நான் கிளம்பரேன்..

என தழுக்க தழுக்க சொல்ல

கண்ணில் நீர் சொட்டியது..

அம்மா அப்பா கிட்டா பொய் சொல்லாம வளந்தவ

இப்போ சொல்றா எல்லாம் கார்த்திக் மீது உள்ள அன்பு தான்...


சுடு தண்ணி காலுல ஊத்துன மாதிரி பறந்து கிட்டு போறா பாருங்க என அம்மா சொல்ல...

அவசரம்னு சொல்லிட்டு

வந்த புள்ள ஒரு வாய் கூட சாப்பிடலா என அப்பா பதிலுக்கு சொல்ல....


கார்த்திக்கு மறுபடியும் சக்தி பஸ் ஏறி கால் பண்ணா....

போன் போல

சரி அவங்க பிரண்டுக்கு கால் பண்ண...
ரிங் போக...


ஹலோ...

அண்ணன் நான் கார்த்திக் வொயிப் சக்தி பேசுறேன் அண்ணா..
கார்த்திக் போன் ரீச் ஆகல
அதான் உங்க கிட்ட கேட்கலாம்னு ..

ம்.. சிஸ் அவன் என் கூட தான் இருக்கேன்..
எங்க வீட்ல..
கொடுக்கவா...???

ம் கொடுங்கனா...

கார்த்திக், கார்த்திக்
சக்தி பேசுறாங்க பேசுடா...

ஹலோ சக்தி...

சொல்லுங்க கார்த்திக்.. சார்...
என்ன நியாபகம் இருக்க..
நீங்க கல்யாணம் பண்ண உங்க வொயிப் பேசுறேன் என சக்தி சொல்ல..

என்ன கோபமா இருக்கியா மா...
சாரி டா அம்மு, கோவிச்சுக்கதா..
நான் இன்னும் ஒரு வாரத்துல
உன்ன பாக்க வர்றேன் டா மா..
நீ அது வரைக்கும் அம்மா வீட்ல இருடா...


ஏன் போனவள ஒரு வார்த்தை எப்படி போன..
போன் ரிங் போகல..
போன ஒரு கால் நீங்க எடுக்கல..
சார் இருங்க.. நான் பார்த்துக்குறேன்..
அவ்வளவு ஆகிட்டுல..
சரி நான் எதும் டிஸ்டப் பண்ணல...
எனக்கு தான் மனசு கேட்கல...
என அழுதிட்டே சக்தி சொல்ல...


அம்மு, அழாதே சக்தி
போன் கீழே விழுந்துட்டுடா...
அதான் பேச முடில..
நான் உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சேன் பிரபு போன்ல இருந்து..
அதுக்குள்ள நீயே போன் பண்ணிட்டா...
சாப்டியா மா...??
வீட்ல அத்தை, மாமா நல்லா இருக்காங்கலா...???


உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றிங்க சார்...
எல்லாரும் நலம்..
நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க..
நான் என்ன பாத்துக்குறேன்...
உங்க வேலையை பாருங்க...
என சக்தி கொஞ்சம் கோபமா சொல்லவும்..

மன்னிச்சுடு மா...
நான் தான் ஒரு வாரத்துல வர்றேனு சொன்னேன்ல..
ஆபிஸ்ல வொர்க் மா...
அடுத்த டைம் வர்றப்ப நான் உன்ன அழைச்சிட்டு போறேன்... மா...
எதோ எதோ சொல்லி சமாதானம் சொல்லி முடிக்க...

ஏன் டா மச்சி பொய் சொல்றா
என பிரபு கேட்க...

இல்லடா... அப்புறம் அவள் சமாதானம் படுத்த முடியாது மச்சி...அதான் டா..

சரி டா...
உன் போன கொடு சர்வீஸ்க்கு கொடுத்துட்டு வர்றேனு பிரபு, கார்த்திக் போன வாங்கி எடுத்துட்டு போக..

கார்த்திக்கு மனசு புல்லா
சக்தி நியாபகம்..
கார்த்திக்கு யாரும் இல்லனு இருந்த கவலையை
அவ வந்த பிறகு
அம்மாவா, அப்பாவா, நல்ல சகோவ, தோழியா இருந்த ஒரு உறவு... நல்ல துணையாக இருந்தவ சக்தி...
அவ அழுததும்
கார்த்திக்கிறகு கண்ணில்
நீர் கசிய..

சக்தி 6 மணி நேர பயணத்திற்கு பிறகு...
பஸ் நிறுத்தும் நிலையத்தில் நின்றுக்கொண்டு...



கார்த்திக் பிரண்ட் பிரபுக்கு கால் பண்ணா..


ஹலோ அண்ணன் நான் சக்தி..
நீங்க எங்க இருக்கீங்க..
கார்த்திக் எங்க வீட்டுக்கு போயிட்டாங்களா..??



இல்லம்மா , என் வீடல தான் இருக்கான்..
நாளைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்மா.. அதுக்கான வேலையில 2 பேரும் பிஸியா இருக்கோம் மா.. என பிரபு பொய் சொன்னான்..




இல்லன்னா நான் இப்பைய கார்த்திக்க பார்க்கனும்.. எனக்காக.. கார்த்திக்க அழைச்சு வந்து விடறீங்களா...???


"நீங்க இப்போ எங்க இருக்கீங்க மா...


கார்த்திக் எதும் சாப்பிடல.. அவன வெயிட் பண்ண சொல்லிட்டு..
போன் ரிப்பையருக்கு கொடுக்க வந்தத எடுக்க வந்தேன் மா..



சக்தி, சரி நான் வர்றேன் அண்ணா.. ஆனா நான் இப்போ.பஸ் ஸ்டாப்ல இருக்கேன் அண்ணா..நீங்க எங்க வீட்டுக்கு போலாம் வர்றீங்களா.. தங்கச்சி??

சரி மா.. ஒரு 5 நிமிசம் நான் வந்து அழைச்சுக்குறேன்..
நீங்க அங்கையே இருங்க மா...

ம் சரி அண்ணா......சக்தி வெளில வேடிக்கை பார்த்தாலும் மனசு ஒரு நிலையில் இல்ல..
6 மணி நேரம் கடந்து வந்த பயணத்தை விட 5 நிமிசம் நின்னது சக்திக்கு ரொம்ப நேரம் போல தோன...

கார்த்திக் சொன்னது கரெக்டு தான்.. நான் தான் ரொம்ப ஓவரா பேசிட்டேன்ல..
தப்பு என் மேல தான்.. நான் தான் புரிஞ்சுக்கல..
என்னோட
முன் கோபம் தான் இதுக்கலாம் காரணம் என மனசுல நினைக்க..

பிரபு வந்து, சக்திய கூப்பிட..
வாங்க போலாம் தங்கச்சி , என் வீட்டுக்கு வாங்க.....

நீங்க, பிரபு அண்ணணா...???
எங்க கல்யாணத்துல பார்த்தது...
கார்த்திக் எப்பையும் உங்கள பத்தி தான் பேசுவாங்க அண்ணன்..



ம்.. நீங்க நலமா..?? நான் அவனோட பழகி 2 வருஷம் தான் ஆகுது. ஆனா என்னோட அம்மாவுக்கு அடுத்து அவன் தான் இப்ப எல்லாமே.. பாசத்துல அவனை யாரும் மிஞ்ச முடியாது.... மா.. சில நேரம் அவனா பார்த்து பொறாமையா இருக்கும்.. பல நேரம் கர்வமா இருக்கும் அவன் என் பிரண்டுனு சொல்ல...

அப்படியானா...??? நீங்க ரொம்ப பாசம் வச்சு இருக்கீங்கணு உங்க வார்த்தையிலே தெரியுது அண்ணன்...

சரி மா, வீட்டுக்கு வாங்க நிறைய பேசலாம்... கார்த்திக் உங்களுக்காக வெயிட்டிங்.. பட் நான் அழைச்சுட்டு வர்றேனு தெரியாது தங்கச்சி...!!!

அண்ணன் நான் கிளம்பி வர்றேது கார்த்திக்கு தெரியாது...

என்ன தங்கச்சி சொல்றீங்க, தெரியாது...
உங்க கிட்ட அவன் பேசுனான்ல...

ம்... பேசுனாங்க அண்ணன்.. ஆனா நான் கிளம்பி வரும் போது தான் கால் பண்ணேன்..

ம்.. சரி மா.. இந்த வளைவு போயி அடுத்த
வளைவு தான் எங்க வீடு...

ஒரு 5 நிமிசம் தான்...


சரி அண்ணா..

பைக் விட்டு இறங்கியதும்..

வாங்க மா.. உள்ள வாங்க..
கார்த்திக்
மேல மாடில தான் இருக்கான் ...
என்ன தயக்கம் தங்கச்சி..
இந்த மாடிப் படி வழியா போங்க ...
நான் டீ எடுத்து வர்றேன்...

(
ஐயோ கார்த்திக் நம்மல.வச்சு பார்க்க போறது இல்ல... நான் வேற சக்தி தங்கச்சிய அழைச்சுட்டு வந்து இருக்கேன்...
என்ன நடக்கப் போகுதோ.. சரி.அவங்க பேசட்டும்.. என பிரபு மனசுல நினைக்க...!!! )



கார்த்திக்கை பார்க்கும் ஆவலில் எப்படி வந்தோம், எப்படி படி ஏறுனோம் எதுமே நியாபகம் இல்ல,
ரூமுக்கு போனதும்..

இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை.. தன்னையறியாமல் சக்தி கண்ணில் வழிந்தது..
கார்த்திக்கை பார்த்ததும் அதை விட பெரிய அத்கிர்ச்சி..
கார்த்திக் கட்டிலில் தலையில்
கட்டு போட்டு சாய்ந்து கொள்ள...


மச்சி, என்னாச்சுடா.. என காலரைப் பிடிச்சு கத்த...
ஏன் டா.. என் கிட்ட சொல்லல என ஒப்பாரி வைக்க..
இதுக்கு தாம் ஒரு வாரம் கழிச்சு வர்றேனு சொன்னியா...??

என்னடா நினக்க்குறா நீ, என சொல்லிக்கொண்டு.. கார்த்திக் கழுத்தை
கட்டி தழுவி அழுதாள்..
எப்படி ஆட்சு...???

ஹே என்னடி கொஞ்சம் நேரம் மூட்சு விடு..
ஹே வாலு இப்ப என்ன ஆட்சு எதுக்கு இப்ப ரொம்ப பீல் ஆகுறா...???

பொறுமையா இருடி... ப்ளீஸ்...


ம்.. என தேம்பி தேம்பி அழுதாள்... எப்படி ஆட்சு, வலி அதிகமா...?? போன் பேசும் போது கூட ஒரு வார்த்தை சொல்லல, இந்த பிரபு அண்ணனும் சொல்ல...
எல்லாம் கூட்டு களவாணி தானே...!!!

நீ பர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகு.. நான் எல்லாத்தையும் சொல்றேன்..

நீ நேத்து ஈவ்னிங் கோவிச்சுட்டு போன பிறகு.. நைட் பஸ் 8 மணி போல ஏராளம் அப்படி நினைச்சேன்..

பிரபு கால் பண்ணான் நான் ஆபிசில்ல ஒர்க் பார்த்துட்டு கிளம்பலாம்னு நினைச்சேன்..
ஆபிஸ்ல மீட்டிங், சோ மணி 10 ஐ நெருங்க ஆரம்பிக்க.. நான் வேகமாக வண்டி ஓட்டிவந்தேன்... நீ கால் பண்ண பொறகு
நான் வண்டிய நிப்பாட்டுனேன்
இல்லன்னா
எதிரில வந்த லாரி என் மேல ஏறி
இப்ப சொர்க்கத்துல இருந்து இருப்பேன்னு சிரிச்சுட்டே சொல்ல...
உனக்கு சிரிப்பா இருக்காடா...
ஏண்டா எங்கிட்ட ஒரு வார்த்த சொல்ல வக்கு இல்ல..
இப்ப என்ன இளிப்பு உனக்கு..
மூஞ்சிய திருப்பி வச்சுடுவேன்..
அப்புறம் எப்படி தலையில அடிச்சுது..
லாரி கன் ட்ரோல மீறி என் சைடுல இருந்த மரத்த பார்க்க வந்ததுல ,
லாரில இருந்த ஒரு பெரிய மரம்
என் தலையில அடிச்சு மயங்கி விழுந்துட்டேன்...
அப்புறம் ஹாஸ்பிட்டல்ல இருந்தது தாம் நியாபகம் இருக்க...

தங்கச்சி , இப்போ நீங்க நார்மல் ஆகிட்டீங்களா. ???

ம்.. எப்போ சரி ஆகும்..

இன்னும் ஒரு வாரத்துல கட்டு பிரிச்சுடலாம்.. சோ நீங்க கவல படாதீங்க....
நான் அவனுக்கு ஆபிஸ்கு லீவ் சொல்லிட்டேன் மா..

ம்.. நல்லது அண்ணா..
அண்ணன் உங்க பிரண்டுக்கிட்ட ஒன்னு சொல்லுங்க..
அவர் நினைச்ச மாதிரி
நான் சம்மதிச்சுட்டேனு..

என்ன அம்மு சொல்றா.. அப்படியா தங்கம்...
என கார்திக் சொல்ல..

ஆமாம் ,
தங்கச்சி உங்களுக்கு விருப்பம் தானே...
முழு சம்மதம் தானே..

ம்.. சம்மதம் தான் நான்.. நல்ல நான் யோசிச்சு தான் முடிவு எடுத்தேன்..

நல்லது பண்ண எதுக்கு தள்ளி போடணும்...???

எனக்காக தானா அம்மு என கார்திக் கேட்க..

ம்.. உங்களுக்காக தான்..
நீங்க சொன்ன அந்த வார்த்தை இன்னும் மனசுல இருக்க..
சரி நீ வந்தத அம்மா கிட்ட சொன்னியா...??

இல்ல மச்சி.. சொல்றேன்..

நீங்க ஆசைப்பட்ட மாதிரி
நாம குழந்தையை தத்து எடுத்துக்கலாம்..
நான் கொஞ்சம் லேட்டா தத்து எடுத்துக்கலாம்னு நினைச்சேன்..
ஆனா உங்க ஆசைக்கு நான்
குறுக்க இருந்தது தப்பு தான்..

தங்கச்சி, உங்களையும் கார்த்திக்கையும் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையா இருக்கு மா..


அண்ணன், அவர் சொன்ன அந்த வார்த்தை தான்..
நான் நல்ல வேலைக்கு போன பிறகு, கொஞ்சம் செட்டில் ஆகிட்டு பவுண்டேஷன் ஸ்டார்ட் பண்ணலாம்னு...
ஆனா , கார்த்திக்
அது செட்டில் ஆகுற வரைக்கும்,
அது எப்போ நடக்குதோ , உங்க அம்மா கிட்ட கேளுனு என்ன சொன்னாங்க


இப்ப ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்னு...
கல்யாணம் ஆகி ஆறு மாசம் தான் ஆகுது
இப்போ வீட்ல நான் பேசுனா பிராப்ளம் ஆகும்னு சொன்னேன்..
அது தான் சண்டை...
அப்புறம் யோசிச்சேன்..
அம்மா , அப்பா இல்லம்மா நான் தான் கஷ்டப்பட்டேன்
என்னால முடிஞ்சது ஒரு குழந்தைக்குவாது
நல்ல அப்பா நானும், நல்ல அம்மாவ நீயும் ஒரு குழந்தைக்கு இருக்கலாம்
என் மனசு சந்தோசப்படும்னு..
சொன்னது தான் இப்ப நானும் அந்த முடிவுக்கு வந்துட்டேன் அண்ணா..
இந்த பெருமை எல்லாம்
கார்த்திக்கு தான்...
அப்புறம் மாதம் மாதம் கொஞ்ச பணம்
ஆதரவற்ற ஒரு குழந்தைகளுக்கும் , முதியோர் இல்லம் கொடுக்கலாம்னு இருக்கோம் அண்ணா...


இப்படி எல்லாரும் நல்ல முடிவு எடுத்தா ,ரோட்டோரத்துல பிச்சையெடுக்குற குழந்தைகளும் , பசி பட்டினியால் வாடுற குழந்தையும், பெரியவங்களும் கண்டிப்ப நம்ம நாட்டுல குறைவாங்க , சந்தோஷமா வாழ்வாங்க...

கரெக்டா சொல்லிட்டா மச்சி...

ம்.. கண்டிப நானும் இனி பண்ணுறேன் மா..

நான் சின்ன வயசுல பட்ட கஷ்டம் தான் டா..
இனி யாரும் படக்கூடாதுனு...
அனாதை என்கிற பட்டம்..
போதும்டா.. ரொம்ப வலிக்குதுடா..
அந்த வார்த்தை கேட்க..

மச்சி இந்த உலகத்துல யாரும் அனாதை இல்ல..
எல்லாரும் கடவுளின் குழந்தைகள்
அப்புறம் அன்பு என்கிற வார்த்தை இருக்கிற வரை அனாதை இல்லங்க...

சரி நாளைக்கு நல்ல ஆசிரமத்துக்கு போயிட்டு குழந்தையை எடுத்து வந்து வளர்ப்போம்.. சரி தானா மச்சி...

தங்கச்சி , நீங்க உங்க வீட்டுக்கு என்ன பதில் சொல்வீங்க...

அண்ணன் , பாசமா சொன்ன புரிஞ்சுப்பாங்க...
அப்புறம் , எனக்கு குழந்தை பிறக்கும் போது அவங்க சகஜமா ஆகிடுவாங்க அண்ணன்...

நல்ல சொன்னா அம்மு, நான் ரொம்ப லக்கி தெரியும்மா...


ம்... அண்ணன் நான் கார்த்திக்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகுறேன் ...


ம்.. சரி மா.. வாங்க உங்க வீட்ல விட்டு வர்றேன்னு சொல்லி அழைச்சு விட...

கார்த்திக , சக்தி.. சக்தி
உனக்கும் சம்மதம் தானா...
அந்த குழந்தையை வச்சு கண்ணுக்குள்ள பாதுகாக்கனும்..

ம்.. சரிங்க..
நீங்க எனக்கு முதல் குழந்தை நீங்க சொன்ன சரி தான் மச்சி...

ஒரு வேள உனக்கு எதும் குறை இருக்கு
இல்ல எனக்கு இருக்குனு , சொன்ன மனசு கஷ்டமா இருக்குமே..

என்னங்க நீங்க , இப்ப இருக்குற சூழ்நிலையில் அவங்க அவங்க பேமிலியை
பாக்க கஷ்டமா இருக்கு மச்சி.

அப்படி சொன்னா , என்ன எனக்கு உடம்பு வீக்கா இருக்குனு டாக்டர் சொன்னத சொல்லுவேன்...

எரும.. அத விடு சாப்டியா...
ம்.. இல்லை...


நீ சாப்டியா மச்சி...

இல்ல.. தங்கம் கோவிச்சுட்டு
போனதுல சாப்பிட முடில... சக்தி

எனக்கும் தான் மச்சி,
சரி சாப்பாட்டு ரெடி பண்ணு
சாப்பிடுவோம்..

நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு..
மச்சான கூப்பிட்டு நல்ல குழந்தையை
நம்ம வீட்டு அழைச்சுட்டு வருவோம்...

ம்.. சரி மச்சி...

ம்..
ரொம்ப தேங்ஸ் மா
என்னோட ஆசைய நிறைவேத்துனதுக்கு என
ஆழமாக சக்தி நெற்றியில் இதழ் பதித்தான் கார்த்திக்...

பதிலுக்கு, ரொம்ப தேங்ஸ்னு சொல்லி
சக்தியும் கார்த்திக்கு முத்தமிட்டாள்....

காலை விடிந்ததும்...
கார்திக்கு ஒரே சந்தோஷம்...

சக்தி , கார்த்திக்கை பார்த்து நெகிழ்ந்து போனாள்....

8 மணி ஆனதும்
பிரபு , கார்த்திக் சக்தி எல்லாரும்
ஒரு ஆசிரமத்திற்கு சென்று
3 மாத குழந்தையை தத்தெடுக்க...
அந்த குழந்தைக்கு
நிறைமதி பேரு வைக்கனும்னு சொல்லி
கார்த்திக் ரெசிஸ்டர் பண்ணி அங்க உள்ள ஒரு பெண்மணியிடம்
2 பேரும் கையெழுத்து போட்டு, குழந்தையை வாங்கினர்...

பிரபு தனது போனில் ஒரு போட்டை எடுக்க...
கார்த்திக்கின் முகம் சந்தோஷத்தில்
பிரகாசித்தது....

சக்தி , நிறைமதியை கையில் வாங்கியதும் தூய்மையான தாயின் அன்பு அவள் முழுதும் உணர்ந்தாள்.....

அவள் கண்ணில் விழுந்த கண்ணீரை கார்த்திக் பார்க்க தவறவில்லை.....❤️❤️❤️❤️❤️❤️❤️

கார்த்திக் சக்தியை அணைத்துக்கொண்டு என்னாச்சு மா...???

கார்த்திக்கை பார்த்து கண்ணால் நன்றி சொன்னாள்.... சக்தி...
பிரபு , கார்த்திக் , சக்தி , அப்புறம் குட்டி தேவதை எல்லாரும் ஒரு செல்பி எடுத்து
வெளியில் வர...


சக்தி அந்த ஆசிரமத்தின் பெயரைப் பார்த்தால்.....


"அன்பே கடவுள்... "என பொறிக்கப்பட்டு இருந்தது......

முற்றும்.....😊😊😊😊💐💐💐💐

பொறுமையாக வாசித்த உங்கள் அனைவருக்கும் நன்றி....

எழுத்துப்பிழைகளும்... குறைகள் இருப்பின் மன்னிக்கவும்......என் முதல் சிறு கதை....🙏🙏 ...



அன்பை வாசிக்கும் சுவாசிக்கும்
உங்கள் பிரிய சகி........!!!

💗மஞ்சுகீதாநாதன்...💗

எழுதியவர் : மஞ்சுகீதாநாதன் (1-Nov-18, 12:27 pm)
சேர்த்தது : பிரிய சகி
Tanglish : unakaaga
பார்வை : 871

மேலே