கார்குழல்

கார்குழலாள் என்று கூறி /
கார்மேகக் கூந்தல்
அழகி என்று உரைத்து /
காணும் பொழுதெல்லாம் /
கனகாம்பரத் தோட்டமெங்கும் /
கண்ணாலே என்னை சுற்றும் மாமா /

நான் மலராத மொட்டு/
முதிராத மாங்காய்/
உதிராத நாத்து /
கனியாத செவ்வாழை ஆமா ./

கார் கூந்தலை அள்ளி முடித்து /
நாகச் சடையிட்டு சூடிக்கோ பூ என்று /
உன் கரம் கொண்டு முளமிட்டு /
மல்லிகை சரம் கொடுக்கும் மாமா /

நான் கட்டோடு கரும்பு /
நீ கிட்ட வந்து முட்டும் எறும்பு /
தொட்டு சுவைத்துப்புட்டால் /
விட்டுப் போகும் மானம் /
அது அவமானம் ஆமா /

கார்குழலாள் என்
மேல் மோகம் கொண்டு /
நீ உருகிய பனி யாக தாகம் தீர்க்க /
அருவியாக ஓடி வரலாமா மாமா /

நான் பனித்துளி பட்ட புல்லு /
மழைத்துளி தொட்ட நீர் /
பூங்காற்று தடவிய மலர் /
புயலில் சிக்கிய தென்னங்கீற்று/
ஆனாலும் நான் கன்னி /
காதலுக்கு இல்லை வில்லி/
நீ நில்லு தள்ளி ஆமா /

(2014 எழுதியவை) 😊

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Nov-18, 8:28 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kaarkuzhal
பார்வை : 348

மேலே