இவள் குழல் ஒன்று போதாதா

மலரோடு விளையாடி
நதியோடு நடம் ஆடி
புன்னகை இதழோடும்
இவள் கருங் குழலோடு
உறவாடும் இளவேனில்
இளந்தென்றலே
மலர் இனிமையா
நதி இனிமையா
இவள் குழல் இனிமையா
சொல்
நீராடி மலர் சூடி வரும்
இவள் குழல் ஒன்று போதாதா
நான் விளையாடி உறவாட
என்று சொல்லி விடை பெற்றது
தென்றல் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-18, 10:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1296

மேலே