சிங்கிட்டே திரியுவாங்களா

ஏன்டி காத்தாயி வட இந்தியாவில யாரைப் பாத்தாலும் அவுங்க பேருகூட சிங்(கு)ன்னு வச்சுக்கறாங்க. அதுக்கு என்னடி காரணம்.

நான் என்னத்தயக்கா கண்டேன். எம் பேரன் பொன்னப்பன். எட்டாவது படிச்சவன். எங்க தோட்டத்தைப் பாத்துட்டு இருக்கறான். அவங்கிட்ட.'சிங்(கு)ன்னா என்னடா அர்த்தம்னு கேட்டேன். அவஞ் சொன்னான் "'சிங்'ன்னா 'பாடு' ன்னு அர்த்தம் பாட்டி."

அப்ப, பேருகூட 'சிங்'குனு பேரு வச்சிருக்கறவங்க எல்லாம் சிங்கிட்டே (பாடிட்டே) திரியுவாங்களா?

அதென்னமோ? நான் என்னத்தக் கண்டேன். எம் பேரன் சொன்னதை உனக்குச் சொன்னேன்.

எழுதியவர் : மலர் (2-Nov-18, 10:05 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 54

மேலே