காதல்

கடவுள் மனிதனை படைத்த நாள் முதல் காதல் உருவானது இந்த காதல் .காதல் என்பது மனிதருக்கு மட்டுமல்லாமல் அணைத்து உயிரிணங்களுக்கும் பொதுவானது அன்பு கொள்ளத் தெரிந்த அணைத்து உயிரிணத்துக்கும் பொதுவானது இந்த காதல்.

ஆறறிவு படைத்த மனிதருக்கு காதல் இன்பம் என்பது வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒரு உணர்வு என்றால் அது மறுக்க முடியாத உண்மை. இந்த காதல் ஆதி காலம் முதல் தற்காலம் வரை சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கின்றது. காதல் கொண்டவர் யாராக இருந்தாலும் தன்னை மட்டுமல்ல இந்த உலகையும் மறந்தே .அலைகின்றனர்.

இந்த காதல் பண்டைய காலங்களில் ஒரு சார்பாக மட்டுமல்லாது கொடுரமானதாவே இருந்திருகின்றது. பழங்காலங்களில் வசதி செல்வாக்கு அதிகாரம் படைத்தவர்கள் தாங்களுக்கு பிடித்தப் பெண் அல்லது காதல் கொண்ட பெண்களை அவர்களின் விருப்பமின்றி தூக்கிச் சென்று பலாத்தகாரம் செய்து அந்தப்புற ராணி அல்லது தனது காம இச்சையை போக்கிக் கொள்ள உதவுமொரு பொருளாக மட்டுமே ஆக்கி கொண்டனர். .சாதாரண மனிதர்கள் கொண்ட காதல் மதம் மொழி இனம் ஏழை என் பல்வேறு காரணமாக தோல்விகளால் துவண்டு போனது.

இன்றைய காலத்தில் காதல் என்பது வேகமாக வளர்ந்து அதன் கிளைகளை பரப்பும் முன்னே கருவிலே கலைந்து விடுகின்றது. காரணம் அவசரம்.மட்டுமல்லாது சரியான புரிதல் இல்லாமை.. வரலாற்றுக் காதல்கள் பெரும்பாலானவை தோல்வியிலேயே முடிந்ததாகத்தான் வரலாறு கூறுகின்றது. நவீன காலதிலும் இந்த காதல் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துவிடுகின்றது. .

சாமியாருக்கு மட்டுமல்ல சக மனிதருக்கும், கோட்டையில் வாழ்வபவருக்கு மட்டுமல தினம் தினம் உன்ன உணவின்றி இருக்க இடமின்றி தெருவோரம் படுத்து உறங்கும் பிசைகரனுக்கும் வருகின்றது இந்த காதல்.

இன்றைய காலத்தில் காதலின் பரிசாக தினம் தினம் சாதி ஆவணக் கொலைகள் மட்டுமல்லாது பல்வேறு வகையிலான குற்ற சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்ண்டிருகின்றன என்பது நாம் செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சியிலும் பார்த்துக் கொண்டுதான் இருகின்றோம்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் கல்லூரிகளில் வந்த காதல் தற்பொழுது பள்ளிகளில் வரும் அளவிற்கு மிக வேகமாக வரந்து இருக்கின்றது. இது உலகில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருகின்றது என்றால் அது மறுக்க முடியாத உண்மை, உலகில் ஏற்றத் தாழ்வை போக்கிஇருகின்றது சாதி மத இன மொழி அடையாளங்களை தனது அன்பினால் உடைத்து எரிந்து இருகின்றது. பல உலக அதிசயங்களை கூட உருவாக்கி இருகின்றது. காதலின் சின்னம் ரோஜா என்றால் உலக காதலுக்கு நினைவுச் சின்னம் நம் நாட்டில் இருக்கும் தாஜ்மஹால் எனறால் அது மிகையாகாது.

காதல் செய்பவர்கள் பலவகை இருப்பதாகச் சொன்னாலும் இருவகை மட்டும் உள்ளனர். தன்னால் காதலிக்கப் பட்ட ஒருவர் தனக்கு கிண்டைக்கா விட்டலும் வாழ்கையில் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒருவகை. .தனக்கு கிடைக்காதவர் வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்பது மட்டுமல்ல அவர் உலகில் வாழத் தகுதியற்றவர் என்ற எண்ணம் கொண்டவர் மற்றெரு வகை.
காதல் மிக புனிதமானது என்பது உண்மை சமுதாயத்தில் தனக்கு இருக்கும் கடமை அல்லது தனது பொறுப்பு எது என்பதை உணர்ந்து அதனை நிறைவேற்றி விட்டு காதல் செய்யுங்கள். படிகின்ற மாணவன் காதல் செய்வது தவறில்லை என்றாலும் அது அவரது கல்வியை சீர்குலைத்து விடும் என்பது உண்மை. காதல் என்பது அன்பின் சங்கம் என்பது உண்மையானால் உங்களது தாய் தந்தையரின் அன்பையும் நினைவில் கொண்டு அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களைச் சார்ந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களுக்கு உங்களின் விருப்பத்தை உணர்த்தி அவர்களின் அன்பையும் பெற்ற காதலே மிகச் சிறந்ததாக இருக்கும் .

எழுதியவர் : கருப்பசாமி (4-Nov-18, 6:32 am)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : kaadhal
பார்வை : 50
மேலே