கிராமத்து மின்னல்கள்

கிராமத்து மின்னல்கள்
****************************************

கானமிடும் குயிலணையும் பச்சைப் பசுஞ்சோலைகள்
சாணமதில் மொழுகியிட்ட தாழ்கூரை இல்லங்கள்
இனத்தோடு நன்குஇணைந்து மேய்கின்ற கால்நடைகள்
உணவுக்காய் நிலம் நாடி ஏர்பிடிக்கும் உழவர்கள்
ஓணான்கள் கொடியேறி இரைபிடிக்கும் காட்சிகள்
ஏணியின்றி மரமேறி "மா " பறிக்கும் சிறுவர்கள்
எண்ணைக்காய் செக்கிலிட காயநிற்கும் வித்துக்கள்
கனவான்கள் அமர்ந்திருந்து நீதியிடும் ஆயங்கள்
கனிஈயா ஆல்நிழலின் ஆடுபுலி ஆட்டங்கள்
துணியின்றி மூக்கொழுக ஓடியாடும் கிள்ளைகள்
நாணமுடன் தலைசாய்த்து நடைபயிலும் பூவைகள்
நாணில்லா பார்வைக்கணை வீசிநிற்கும் காதலர்கள்
கோணாத வகிடெடுத்து தலைமுடியும் கோதைகள்
மானாட்டம் மயிலாட்டம் நிகழ்ச்சியுறும் பெருந்திடல்கள்
தானமிடும் பெருசுகள் நேயமுள்ள மனிதர்கள்
ஊனமில்லா உள்ளங்கள் வாழ்கின்ற பாசறைகள்
( கிராமத்து மின்னல்கள் )

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Nov-18, 3:33 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 74

மேலே