மனதை வென்ற மழை

அதோ சாரல் மழை வீசுகிறது!

நான் சென்றேன் என் சிறு 

வயது கனவுகளில் - ஆம்

காகிதத்தில் கப்பல் விட்ட 

அழகிய காலங்கள் அது

அம்மா என்னை இரசித்தாள்!

இன்று கப்பல் விட நான்

காகிதம் கிழித்தேன் அம்மா 

தலையில் கொட்டி ஏழு கழுதை 

வயசாகிறது கப்பலா என்றாள்!

மனதோடு நினைவுகளை அணைத்தவாறு

இரசிக்க சென்று விட்டேன்...

எழுதியவர் : சாந்தி சரவணன் (5-Nov-18, 5:09 pm)
சேர்த்தது : Santhi
பார்வை : 59

மேலே