சுதந்திரமே எங்கே உறங்குகிறாய்

சுதந்திரமே எங்கே உறங்குகிறாய்
================================
சுதந்திரம் அது எங்கே
நலிந்த கூட்டம்
நடைபாதை ஓரத்தில் வாழ்க்கை
நம்பி ஓட்டு போட்டவர்களும்
நட்டாற்றில் விட்டு விட
நயவஞ்சக நரிகளின் சதியால்
நாளும் பசி,பிணி, பட்டிணி
வேச கபடதாரிகள்
வேடிக்கையான மனிதர்கள்
போராடி வாங்கிய சுதந்திரம்
வெறும் கொடியேத்தி மிட்டாய்
கொடுத்தே கொண்டாட்டம்
பளபளக்கும் வார்த்தைகள்
இருட்டில் கிடக்கும் மனது
வாய்வார்த்தைகள் அனைத்தும்
வர்ணஜாலங்கள்
பெண்ணை போகப் பொருளாக்கி
கசக்கி வீசுவது குறைந்தபாடில்லை
பாரதியின் கனவு நிஜமாகவில்லை
படித்து,படித்து இன்புறுகிறோம்
பதித்து வைத்த வார்த்தைகளாய்
பதில் அளிக்க யாருமில்லை
நாற்காலிக்கு போடும் சண்டையில்
நாட்டை எங்கே காப்பது
அந்நியன் ஆண்டபோதோ
அடிமைகளாய் மட்டும்தான்
நம்மவன் ஆளும்போதோ
நேர்மையில்லா கொள்கை
வீதிக்கொரு கட்சி
சாதிக்கொரு சங்கம்
சாதித்ததென்ன நாட்டிலே
சாகாவரமா கேட்கிறோம்
சமத்துவ வாழ்வை யாசிக்கிறோம்
காற்றை ஊதி பலூனில் அடைத்து
சாளரங்களிடம் யாசிக்கிறோம்
ஏ நீதி கெட்டவர்களே
ஏய்த்து பிழைப்பதை விட்டுவிட்டு
எம் மக்களை வாழ விடுங்கள்
அரியணை அவர்களுடையது
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
சுத்த ஆன்மாக்களின் தந்திரம் அது

எழுதியவர் : உமாபாரதி (6-Nov-18, 1:51 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 66

மேலே