தமிழ்மொழி

மொழிகள் பலவே !
என் உயிர் தமிழே !
உலகின் முதலே !
என் உயிரின் முடிவே !
தொடர்பின் வடிவே !
நான் தொழுகும் இறைவியே !
என் உயிரின் நாடியே !
என் நாவினில் நடமாடும் தேவியே !
பாரதி கண்ட புரட்சித்தமிழே !
எங்கள் பாரதம் கண்ட புதுமைத்தமிழே !
செழித்து வாழும் செந்தமிழே !
எங்கள் செவிக்கு நீயோ தேனமுதே !
இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இளமையோடு நீ வாழ்கின்றாய் !
புதுப்புது வார்த்தைகள் கொண்டு புதுமையாய் நீ விளங்குகின்றாய் !
நீரின்றி உலகிலே உயிரில்லை !
தமிழின்றி தமிழர்க்கு சிறப்பில்லை !
எனவே ,
அந்நிய நாட்டு மொழியின் அம்சம் பேசி !
நம் நாட்டு மொழியை அழிக்க வேண்டாம் !
அதனால் ,
தாய்மொழியை கற்போம் !
கற்பிப்போம் !
பெருமைகளை பரவி பேரின்பமுற்று வாழ்வோம் !

எழுதியவர் : M. Santhakumar . (6-Nov-18, 5:30 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 2178

மேலே