இயற்கை வளர்ப்போம்

இயற்கை வளர்ப்போம் !
நம் இந்திய நாட்டினிலே !
இயற்கை வளர்ப்போம் !
நாம் இன்பமுற்று வாழ்ந்திடவே !
நாம் பிறப்பதும் இயற்கை !
நாம் இறப்பதும் இயற்கை !
ஆனால் !
நம்மை வளர்க்கின்ற இயற்கையினை நாம் வளர்த்தோமா?
இல்லை !
மரம் வெட்டி மாடி வீடு கட்டுகிறோம் !
குளம் வெட்டி குறுக்குத் தெரு அமைக்கிறோம் !
வண்டிகள் ஓட்டி காற்றின் வாசம் அழிக்கிறோம் !
காட்டினை அழித்து காசு செய்கிறோம் !
மாட்டினை அழித்து மாடல் பொருட்கள் செய்கிறோம் !
தேவையில்லா ஒன்றினை தேடி தேடி அலையும் கூட்டமாய் மாறி நம் தேகத்தை குளிரூட்டவும் பொருட்கள் செய்து விட்டோம் !
இரவு செய்த உணவுகளை பதப்படுத்தவும் பொருட்கள் செய்து விட்டோம் !
இவையெல்லாம் எதற்கு !
வானத்தில் ஓட்டை வீழ்வதற்கா ?
இல்லை !
நம் வாழ்க்கை கோட்டை ஏறுவதற்கா ?
சிந்தியுங்கள் !
கூழை விட கூகுள் சிறந்ததாகிவிட்டது !
அதனால் தான் சிறுபிள்ளையும் குறுடாகிவிட்டது !
வாழ்க்கை விட வாட்ஸ் அப் பெரிதாகி விட்டது !
அதனால் தான் வாரம் நம்மை கடந்து செல்கிறது !
சமூகத்தை விட சமூக வலைதளங்கள் மீதுதான் மோகம் கொள்கிறோம் !
அதனால் தான் வாழ்க்கையில் மூழ்கி நிற்கிறோம் !
இதுவரை இருந்தது போதும் ....
இனிமேலாவது இயற்கையை ரசித்து !
உலகினை உணர்ந்து !
வாழ்வினில் சிறந்து !
வாழ்வோம் !

எழுதியவர் : M. Santhakumar . (6-Nov-18, 5:54 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : iyarkai valarppom
பார்வை : 172

மேலே