மழை இடையாள்

கண்ணோ வின் மீன்கள்
குழலோ வான் மேகம்
எழிலோ வட்ட நிலா
குரலோ கானக் குயில்
கழுத்தோ வலம்புரி தான்
தோளோ வண்ண மாலை
மார்போ வெண் மஞ்சம்
இடையோ மழை மின்னல்
தொடையோ செவ்வாழை
கடைந்தெடுத்த காண்டீபமே
புடம் போட்ட பொற்ச்சிலையே - உனை நினைத்து
புண்ணாச்சு என் மனமே
புதுக் குளத்தின் மதுமலரே
எனைக் கண்டு புன்னகைத்தால்
என் ஆயுள் வளருமடி......

எழுதியவர் : நன்னாடன் (7-Nov-18, 10:51 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 106

மேலே