யாவர்க்கும்

யாவர்க்குமாம்
தனிக்குடித்தனம் -

தொப்புள் கொடி
அறுபடும் வேளை

யாவர்க்குமாம்
கூட்டுக் குடித்தனம் -

தாலிக் கொடி
கூடும் வேளை

யாவர்க்குமாம்
பொதுக் குடித்தனம் -

பேரப் பிள்ளைகள்
சூழும் வேளை

யாவர்க்குமாம்
புதுக் குடித்தனம் -

மூச்சுத் தொடர்
முடியும் வேளை

எழுதியவர் : Dr A S KANDHAN (8-Nov-18, 12:55 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 190

மேலே