என்னவளே உனைக்கண்டு அன்னமும் நாணமுறும்

என்னவளே உனைக்கண்டு அன்னமும் நாணமுறும்
****************************************************************************************

பண்ணிடைத் தமிழ்போல பழத்தின் சுவையாக
கண்ணிடை மணிவிழியாய் கடுவிருளில் சுடராக
விண்ணிடை ஒளிரும் அழகு வானவில்லாய்
மண்ணிடை எந்தனுக்கு கிடைத்திட்ட திருமகளே
உன்இடை அதுபார்த்து நாணலும் தலைசாய்க்கும்
நின்நடைக்கு ஈடின்றி அன்னமும் நாணமுறும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (8-Nov-18, 9:39 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 52

மேலே