அம்பத்தாறின்சு ராசா

ராசா ஒருத்தரு வந்தாக - உசுரு
தேசத்துக்காகனு சொன்னாக
தேசம்பல தெனம் பறந்தாக - அங்க
வேசம் பலவும் போட்டாக.

அம்பதுநாளில் கறுப்பெரியும் - இல்ல
அம்பத்தாறின்சு மார்பெரியும்
ஆவேசமானாரு ராசா -பின்ன
அமைதியாகிப் போனாரு நைசா

ஆரு வந்து அடிச்சாலும் - சாமி
தேருபோல நடந்தாக
கறுப்பு வந்து அடிக்கையில - பாவம்
கரைஞ்சிருச்சு அவர் பொவுசு

வேதம் படிச்ச விஞ்ஞானி - ராச
வேடம் தரிச்ச மெய்ஞானி
மேட மயங்கும் மேதாவி - ராசா
ஊர ஏய்க்கும் ஊதாரி

உலகம் சுத்தும் மம்மூதற்கு - ஐயா
உள்ளூர் காத்து ஒவ்வலியோ
ஏரோபிளேனில் உற்சவமாம் - சாமி
வாரதெப்ப கருவறைக்கு

வேதநாயகரு ஆட்சியில - இங்க
வேலைக்கில்ல பஞ்சமய்யா
பக்கம் பக்கமா பேசுவாக - கேட்டா
பக்கோடா கடைவெக்க சொல்வாக

பழைய ராசா பாட்டையெல்லாம் - ராசா
புதிய ராகத்தில பாடுவாக
பாடுகின்ற அந்த பாட்டையெல்லாம் - ராசா
பட்டி தொட்டியெலாம் பரப்புவாக

சீமார்கள் ஆஸ்தி சேர்த்திடுத்தான் - சாமி
சிறப்பா சேவகம் செய்வாக
ஏழைபாழைகள பாத்துபுட்டா - ராசா
ஏழைத்தாய் மவனா ஆவாக

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (8-Nov-18, 1:27 pm)
பார்வை : 113

மேலே