காதல்

கடல் நீர்க்கூட வற்றிவிடலாம்
கடற்கரையில் மணலும் காணாமல் போகலாம்
வெண்ணிலா வானில் வாராது போகலாம்
இரவில் மின்மினுக்கும் நட்சத்திரங்களும்
வானில் இல்லாமல் போகலாம்
உதய சூரியன் கிரணங்கள் தீண்டியும்
கமல் மொட்டுகள் மலராது போகலாம்
ஏன் தாய்க்கூட சேயை மறந்து விடலாம்

பெண்ணே,உன்மீது நான்கொண்ட காதல்
அது என்றுமே வற்றா புனல்
என்றுமே மாறாது, என்றும் உன்னை
மட்டுமே தேடி வரும் உண்மைக் காதல்
உன்னையே சுற்றி சுற்றி வரும் -உன்னுள்
உன் இதயம் சென்றடைந்து , நீ சுவாசிக்கையில்
'நம் சுவாசமாய்' உன்னிலிருந்து வெளிவரும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Nov-18, 1:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 299
மேலே