காதல்

செம்பவள இதழ்கள் விரிய
கட்டிவைத்த முல்லைச்சரமாம்
வெண்முத்துப்பற்கள், புன்னகையாய்
உந்தன் ஒளிர்நிலவு முகத்தை அலங்கரிக்க
அன்றலர்ந்த தாமரைப்பூப்போல என்னெதிரே
நிற்பவளே , இதோ, உனக்காகவே காத்திருக்கும்
என்னை ஒருமுறை உந்த வேல்விழியால் நோக்குதியேல்
என் மனம் குளிரும் பி[அடைபடக்கும் என் இதயத்தில்
உன் பார்வை இறங்க அதுவே காதல் துடிப்பாய் மாறிடுமே
என் வாழ்வை உய்விக்க ....இன்னும் தாமதம் ஏன் பெண்ணே
பாராமுகம் துறந்து பார்க்குமுகமாய் மாறாதோ உந்தன் முகம்
என்னைப் பார்த்து, 'உன்னை நான் காதலிக்கிறேன்' என்று கூறாதோ
ஒரு யுகாந்திரம் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன் நான்
உன் காதலுக்கு, உன் பார்வைக்கு .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Nov-18, 4:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 85
மேலே